Public request for all buses to come and go within the city of Ranipet


மாவட்டத்தின் தலைநகரான ராணிப்பேட்டையில் கலெக்டர், எஸ்பி அலுவலகம் உட்பட பல்வேறு அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், சிப்காட்டில் பெல் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் மற்றும் கம்பெனிகள் உள்ளது. இந்நிலையில் ராணிப்பேட்டை டவுன் வழியாக அரக்கோணம். வாலாஜா, சோளிங்கர். சித்தூர் மற்றும் திருவலம் பகுதிக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. ராணிப்பேட்டை நகரையொட்டி சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது.

இந்த சாலையில் செல்லும் வேலூர், ஆரணி, சென்னை, காஞ்சிபுரம், தாம்பரம், பெங்களூரு, ஆந்திரா, சித்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அரசு, தனியார் பஸ்கள் அனைத்தும் ராணிப்பேட்டை நகருக்குள் வராமல் அதனை தவிர்த்து பைபாஸ் சாலையில் சென்றுவிடுகிறது. இதனால் பயணிகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் என பலர் பெரிதும் அவதிப்படுகின்றனர்.

குறிப்பாக இரவு நேரங்களில் சென்னையில் இருந்தோ அல்லது வேலூர் பெங்களூவில் இருந்தோ ராணிப்பேட்டை வரவேண்டும் என்றால் வாலாஜா டோல்கேட் பகுதியில் தான் பஸ்சில் இருந்து பயணிகள் இறக்கி விடப்படுகின்றனர். அங்கிருந்து ராணிப்பேட்டைக்கும், முத்துக்கடை உள்ளிட்ட நகர் பகுதிக்குள் வருவதற்கு பஸ் வசதி இல்லாத தால் கர்ப்பிணிகள், முதியவர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், விவசாயிகள் பெரும் வேதனை அடைந்து வருகின்றனர்.

எனவே அனைத்து அரசு மற்றும் தனியார் பஸ் களும் ராணிப்பேட்டை புதிய பஸ் நிலையம் மற்றும் முத்துக்கடை பஸ் நிலையத்திற்குள் இரவு, பகல் நேரங்களில் வந்து செல்ல மாவட்ட நிர்வாகம், காவல் நிர்வாகம், நகராட்சி நிர்வாகம், ஆற்காடு அரசு பணி மனை ஆகியோர் இணைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் கர்ப்பிணிகள், முதியோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.