Petrol and diesel prices have risen for the second day in a row


சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறைக்கு அரசு அனுமதி அளித்தது. இதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன.

இதற்கிடையில், கடந்த 137 நாட்களாக ஒரே விலையில் நீடித்த பெட்ரோல், டீசல் நேற்று அதிகரித்தது. அதன்படி, நேற்று ஒருலிட்டர் பெட்ரோல் 101 ரூபாய் 16 காசுகளுக்கும், டீசல் 92 ரூபாய் 19 காசுகளுக்கும் விற்கப்பட்டது.

இந்நிலையில், சென்னையில் 2-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை இன்றும் அதிகரித்துள்ளது.

அதன்படி, பெட்ரோல் லிட்டருக்கு 0.75 காசுகள் அதிகரித்து 102 ரூபாய் 91 காசுகளுக்கும், டீசல் லிட்டருக்கு 0.76 காசுகள் அதிகரித்து 92 ரூபாய் 95 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டுகிறது.