ஆங்கிலேயர் ஆட்சியில் 1866ம் ஆண்டு நவம்பர் 2ம் தேதி உரு வாக்கப்பட்ட வாலாஜாபேட்டை நகராட்சி தமிழகத்தின் முதல் நகராட்சி என்ற பெருமை கொண்டது. இந்நக ராட்சியில் உள்ள 24 வார்டுகளில், சமீபத்தில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் புதிதாக தேர்ந்தெடுக் கப்பட்ட கவுன்சிலர்கள் அனைவரும் இன்று பொறுப்பேற்க உள்ளனர்.

இந்த தேர்தலில், வாலாஜாபேட்டை நகராட்சியில் திமுக 15 வார்டுகளையும், அதிமுக., 6 வார்டுகளையும், பாஜ, பாமக., விஜய் மக்கள் இயக்கம் ஆகியன தலா ஒரு வார்டையும் கைப்பற்றியுள்ளன. இவர்கள் அனைவரும் இன்று (2 ம் தேதி) நகராட்சி அலுவல கத்தில் கவுன்சிலராக பதவியேற்கவுள்ளனர்.

பல்வேறு கனவுகளுடன், எதிர்ப்பார்ப்புகளுடன் உள்ள கவுன்சிலர்களுக்கு பொறுப்புகள் நிறைவே காத்திருக்கிறது. 156 ஆண்டு பழமையான இந்நகராட்சியில் 150வது ஆண்டு விழா நடத்தி சிறப்பு நிதி பெறுவதிலும் கூட கடந்த காலத்தில் இருந்தவர்கள் யாரும் அக்கரை காட்டவில்லை என்று மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது.

இந்த சூழ்நிலையில், ஆளும் திமுக வசம் நகராட்சி சென்றுள்ளதால் மக்களின் எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. முதற்கட்டமாக தெருவுக்கு தெரு மக்களை பயமுறுத்தும் தெரு நாய்களிடம் இருந்து சிறுவர், சிறுமி களை காப்பாற்ற வேண்டும். தெருக்களில் சுற்றித்திரியும் கால்நடை களை கட்டுப்படுத்த தீர்வு காண வேண்டும்.

வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில், பஸ் ஸ்டாண்ட் அபிவிருத்தி பணிக்காக ஒதுக்கப்பட்ட நிதி ரூ. 26 லட்சம், பஸ் ஸ்டாண்ட் வியாபாரிகளின் அழுத்தம் காரணமாக பணிகள் செய்யாமல், அந்த தொகை மத்திய அரசுக்கே திரும்பிச் சென்றுவிட்டது. எனவே எலி வலை போல் உள்ள பஸ் ஸ்டாண்டை விரிவாக்கம் செய்ய வேண் டும். அத்துடன் நகரத்துக்கு வெளியே அணைக்கட்டு ரோட்டில், கிடப்பில் போடப்பட்டுள்ள புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டும் பணியை நிறைவேற்ற வேண்டும்.

நகரில் அனைத்து பகுதிகளிலும் உள்ள கழிவுநீர் கால்வாய்களை துார் வாரி 20 ஆண்டுகள் ஆகிறது. அவற்றை இப்போதாவது துார் வார வேண்டும். மக்களுக்கு வாரம் ஒரு முறை வழங்கப்படும் குடிநீர், ஏற்கனவே வழங்கப்பட்டதுபோல் ஒரு நாள் விட்டு ஒரு நாள் வினியோகம் செய்ய வேண்டும்.

இப்படி ஆண்டுக்கணக்கில் தேங்கிக்கிடக்கும் நகர மக்களின் எதிர்பார்ப்புகளை இன்று பதவியேற்க உள்ளகவுன்சிலர்கள் நிறைவேற்ற சபதம் ஏற்க வேண்டும் என்பதே பொது" மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.