Ministers R. Gandhi and Ganesan inaugurated the first ever employment camp in Ranipettai

ராணிப்பேட்டையில் தனியார் வேலைவாய்ப்பு முகாமை அமைச்சர்கள் ஆர்.காந்தி மற்றும் சி.வெ. கணேசன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி வைத்து தொடங்கி வைத்தனர்.
தமிழக முதல்வரின் 69- வது பிறந்தநாளையொட்டி ராணிப்பேட்டைமாவட்ட நிர்வாகமும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மற்றும் ஜி.கே. உலக பள்ளி இணைந்து ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதன் முறையாக தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் ஜி.கே. உலக பள்ளியில் நேற்று நடைபெற்றது.
தமிழககைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் ஆகியோர் குத்துவிளக் கேற்றி வைத்து முகாமை தொடங்கி வைத்தனர்.
முகாமில், மாநில சுற்றுச்சூழல் துறை செயலாளர் வினோத் காந்தி, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் வீரராகவராவ், டிஆர்ஓ முகமது அஸ்லாம், ஆர்டிஓ பூங்கொடி, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் லோகநாயகி, வேலைவாய்ப்புத்துறை சென்னை மண்டல இணை இயக்குநர் அனிதா, ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவிதா, வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குனர் பரமேஸ்வரி, அலுவலர் முகமது கனி. டிஎஸ்பி பிரபு, இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இம்முகாமில் 140க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்தனர். இதனை அடுத்து திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி எம்எல்ஏவு மான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பணி நியமன ஆணைகளை வழங்கினார். முன்னதாக, உதயநிதி ஸ்டாலினுக்கு ராணிப்பேட்டை நகரம் மற்றும் இளைஞர் அணி திமுக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் நகர பொறுப்பாளர் பூங்காவனம், இளைஞரணி அமைப்பாளர் எழில்வாணன், நகர மன்ற தலைவர் சுஜாதா, கவுன்சிலர்கள் கிருஷ்ணன். வினோத்குமார், எல்லப்பன், கோபி, கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேற்கண்ட வேலை வாய்ப்பு முகாமில் பேரூராட்சித் தலைவர் ஏ.கே. சுந்தரம் துணைத்தலைவர் உஷா ராணி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, வாலாஜா ஒன்றிய குழுத்தலைவர் சேஷா வெங்கட், நெமிலி ஒன்றியக் குழுத்தலைவர் வடிவேலு, வாலாஜா நகர மன்ற தலைவர் ஹரிணிதில்லை, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் மாலதிகணேசன், கடப்பேரி ஊராட்சி மன்ற தலைவர் சண்முகம் உள்பட மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி நன்றி கூறினார்.