ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் அருகே நேற்று டிரைலர் லாரி மோதி பைக்கில் சென்ற புகைப்பட நிபுணர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் அருகே பொன்னை சாலையில் உள்ள குமணந்தாங்கல் கிராமம் பஜனை கோயில் தெருவைச் சேர்ந்தவர் முனுசாமி (50). இவர் புகைப்பட நிபுணர். இவரது மனைவி புஷ்பா. இவர்களுக்கு 4 மகன்கள் ஒரு மகள் உள்ளனர்.
இந்நிலையில் முனுசாமி நேற்று மாலை குமணந்தாங்கல் கிராமத்தில் இருந்து பைக்கில் ராணிப்பேட்டைநோக்கி சென்றுகொண்டிருந்தார். லாலாப்பேட்டை பெட்ரோல் பங்க் எதிரே சென்றபோது பின்னால் வந்த டிரைலர் லாரி இவர் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட முனுசாமி பலத்த காயங்களுடன் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து இறந்த முனுசாமியின் மனைவி புஷ்பா சிப்காட் போலீ சில் நேற்று மாலை புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ் பெக்டர் தாசன் வழக்குப்பதிவு செய்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து டிரைலர் லாரி டிரைவரை தேடி வருகிறார்.