ராணிப்பேட்டை நகர் மன்ற ராணியாக K. சுஜாதா வினோத் தேர்வு
ராணிப்பேட்டை மாவட்டத்தின் தலைநகரம் ராணிப்பேட்டை. இந்த நகரத்தின் மன்றத் தலைவர் பதவி பெண்களுக்கு என ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு 30 வார்டுகள் உள்ளன. திமுகவிடம் 23 கவுன்சிலர்களும், அதிமுகவிடம் 4 கவுன்சிலர்களும், காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சிகளிடம் தலா ஒரு கவுன்சிலர் என்கிற கணக்கில் உள்ளனர்.

ஆளும்கட்சியான திமுகவைச் சேர்ந்த பெண் கவுன்சிலர் தான் ராணிப்பேட்டையின் ராணியாகப்போகிறார் என்பது உறுதியானது.


ராணிப்பேட்டை அமைச்சரின் தொகுதி, அவர் வசிக்கும் நகரம் என்பதால் நகர்மன்றத் தலைவியாக யாரைத் தேர்வு செய்வது என்பதில் சிறப்பு கவனம் செலுத்தினார். இறுதியில் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வினோத் மனைவி சுஜாதாவை தேர்வு செய்தார்.