Islamists protest against ban on wearing hijab at Muthukkadai last evening
கர்நாடக மாநிலத்தில் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்ததை கண்டித்து ராணிப்பேட்டை அனைத்து (சர்) ஜமாஅத் சார்பில் ராணிப்பேட்டை முத்துக்கடையில் நேற்று மாலை கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ராணிப்பேட்டை சர் ஜமாத் தலைவர் அப்துல் வாஜித் தலைமை தாங்கினார். செயலாளர் ஷாபுதீன்,துணைத்தலை வர்கள் ராஜா முஹம்மது, தமீம், துணை செயலாளர் அஜீஸ் ரஹ்மான் முன்னிலை வகித்தனர். ராணிப்பேட்டை காவா ஜாமியா மஸ்ஜித் அப்துல்லா மிஸ்பாஹி வரவேற்றார். ராணிப்பேட்டை காரை மஸ்ஜித் நாபியா பாத்திமா ஜம் ஷித்ஜான் தொகுப்புரை ஆற்றி பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ராணிப்பேட்டை ஆற்காடு சாலையில் உள்ள மஸ்ஜித் பழைய பஸ் நிலையம் நவல்பூர் காரை காந்தி சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள மஸ்ஜித்களிலிருந்து முஸ்லிம்கள் கலந்துகொண்டு கோஷங் களை எழுப்பினர்.