உக்ரைனில் நடந்த தாக்குதலில் இந்திய மாணவர் உயிரிழப்பு!
உக்ரைன் கார்கிவ் நகரில் நடந்த தாக்குதலில் இந்திய மாணவர் உயிரிழந்துள்ளார். உக்ரைனில் நடைபெற்று வரும் தாக்குதலில் இந்திய மாணவர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைனில் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் நகரில் நடைபெற்ற ரஷ்ய தாக்குதலில் இந்திய மாணவன் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ரஷ்ய படைகள் இன்று காலை முதல் வான்வழி தாக்குதல் நடத்திவருகின்றனர். அதில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மாணவர் நவீன் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
கார்கிவ் நகரிலிருந்து வெளியே ரயில் நிலையத்திற்கு செல்லும்போது குண்டுவீச்சு தாக்குதலில் மாணவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.