Baby aadhaar card: - How to apply for Baal Aadhaar card for Children
இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் கார்டு மிக முக்கியமான ஆவணமாக இருக்கிறது. அரசு திட்டங்களின் கீழ் பயன்பெறுவது முதல் வருமான வரித் தாக்கல் செய்வது வரை பல விஷயங்களுக்கு ஆதார் கார்டு அவசிய தேவையாக உள்ளது.
குழந்தையின் 6 மாதம் முதல் 5 வயது வரை குழந்தைக்கு ஆதார் கார்டு பெரும் முறை.
இப்போதெல்லாம் பள்ளிகளில் குழந்தையை சேர்க்கும்போது கூட பால் ஆதார் கார்டு கேட்கின்றனர். எனவே, உங்கள் குழந்தைக்கு பால் ஆதார் கார்டு பெற வேண்டுமெனில் எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பதை பார்க்கலாம். புதிதாக பிறந்த குழந்தை முதல் சிறுவர்கள் வரை அனைவரும் பால் ஆதார் கார்டு பெறலாம்.
குழந்தைக்கு ஆதார் கார்டு பெறுவது எப்படி? How to apply Child Aadhar Card in Tamil
- பால் ஆதார் கார்டு பெற குழந்தையின் பிறப்புச் சான்றிதல் அல்லது அரசு மருத்துவமனையில் வழங்கப்பட்ட டிஸ்சார்ஜ் ஸ்லிப் (Discharge Slip) வேண்டும்.
- பெற்றோரில் ஒருவரின் ஆதார் கார்டு வேண்டும்.
- ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆதார் கார்டு பெற வேண்டுமெனில் ஆதார் சேவை மையத்துக்கு சம்பந்தப்பட்ட குழந்தையையும் பெற்றோர் அழைத்துச்செல்ல வேண்டும்.
- பால் ஆதார் கார்டு பெறுவதற்கு அருகில் உள்ள ஆதார் சேர்க்கை மையத்துக்கு செல்லவும்.
- ஆதார் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பிறப்புச் சான்றிதழ் மற்றும் பெற்றோரின் ஆதார் கார்டுடன் சமர்ப்பிக்கவும்.
- பெற்றோரின் மொபைல் நம்பர் உள்ளிட்ட விவரங்களும் வழங்கப்பட வேண்டும்.
5 வயதிற்குட்பட்ட குழந்தை என்பதால் இவர்களுக்கு பயோமெட்ரிக் முறை மேற்கொள்ளப்பட மாட்டாது. பயோமெட்ரிக் முறை என்பது குழந்தையின் கண்கள் மற்றும் கைரேகைகள் ஸ்கேன் செய்யமாட்டார்கள். இந்த குழந்தைகள் 5 வயதை கடந்த பின்புதான் இவர்களுக்கு பயோமெட்ரிக் முறை பின்பற்றப்படும்.