குறள் : 703
குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்
யாது கொடுத்துங் கொளல்
மு.வ உரை :
(முகம் கண் இவற்றின்) குறிப்புக்களால் உள்ள குறிப்பை உணர வல்லவரை நாட்டின் உறுப்புக்களுள் எதைக் கொடுத்தாவது துணையாக பெற்றுக்கொள்ள வேண்டும்.
கலைஞர் உரை :
ஒருவரின் முகக் குறிப்பைக் கொண்டே அவரது உள்ளக் குறிப்பை அறிந்து கொள்ளக்கூடிய ஆற்றலுடையவரை, எந்தப் பொறுப்பைக் கொடுத்தாவது துணையாக்கிக் கொள்ளவேண்டும்.
சாலமன் பாப்பையா உரை :
தான் குறிப்புச் செய்ய, அதைக் கண்டு பிறர் முகத்தையும் கண்ணையும் பார்த்தே அவர் மனக்கருத்தைக் கண்டு சொல்லும் திறம் மிக்கவரைத் தன்னிடம் இருக்கும் செல்வங்களுள் எதைக் கொடுத்தேனும் துணையாக வைத்துக் கொள்ள வேண்டும்.
Kural 703
Kurippir Kurippunar Vaarai Uruppinul
Yaadhu Kotuththum Kolal
Explanation :
The king should ever give whatever (is asked) of his belongings and secure him who by the indications (of his own mind) is able to read those of another.
Horoscope Today: Astrological prediction for March 28, 2022
இன்றைய ராசிப்பலன் - 28.03.2022
இன்றைய பஞ்சாங்கம்
28-03-2022, பங்குனி 14, திங்கட்கிழமை, ஏகாதசி திதி மாலை 04.15 வரை பின்பு தேய்பிறை துவாதசி. திருவோணம் நட்சத்திரம் பகல் 12.24 வரை பின்பு அவிட்டம். அமிர்தயோகம் பகல் 12.24 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. ஏகாதசி. பெருமாள் - ஹயக்ரீவர் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம்
காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.
Today rasi palan - 28.03.2022 | இன்றைய ராசிப்பலன் - 28.03.2022
மேஷம்
இன்று நீங்கள் எந்த காரியத்தையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள். உத்தியோக ரீதியாக வெளியூர் செல்லும் வாய்ப்பு அமையும். தொழில் வளர்ச்சிக்காக மேற்கொள்ளும் முயற்சிகள் நற்பலனை தரும். திருமண தடைகள் விலகும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகரிக்கும். மன நிம்மதி ஏற்படும்.
ரிஷபம்
இன்று உங்களுக்கு தேவையற்ற பிரச்சினைகளால் மனஉளைச்சல் உண்டாகலாம். பிள்ளைகளுக்கு படிப்பில் சற்று ஆர்வம் குறையும். வேலையாட்களின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கையாளும் பொருட்களில் கவனம் தேவை. எடுக்கும் முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும்.
மிதுனம்
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் சற்று மந்த நிலை ஏற்படும். தேவையில்லாமல் மற்றவர்கள் மீது கோபப்படும் சூழ்நிலை உருவாகும். எதிலும் பொறுமை தேவை. உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகளில் ஈடுபடும் போது நிதானமாக சிந்தித்து செயல்படுவது நல்லது.
கடகம்
இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் சிலருக்கு இடமாற்றம் உண்டாகும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேறும். ஆரோக்கிய பாதிப்புகள் ஓரளவு குறையும்.
சிம்மம்
இன்று வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். புதிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பூர்வீக சொத்துக்கள் வழியாக அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் பொறுப்புடன் செயல்பட்டு நல்ல பெயர் எடுப்பீர்கள்.
கன்னி
இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்கள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.
துலாம்
இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சில இடையூறுகள் உண்டாகலாம். நண்பர்களுடன் மனக்கசப்பு ஏற்படும். உடன் பிறப்பிடம் ஒற்றுமை குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வேலையில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும்.
விருச்சிகம்
இன்று உத்தியோகத்தில் உங்கள் திறமையால் வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்புகள் உருவாகும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர். திருமண முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வராத பழைய கடன்கள் கைக்கு வந்து சேரும்.
தனுசு
இன்று நீங்கள் எடுக்கும் காரியத்தை முடிப்பதற்கு தடை தாமதங்கள் உண்டாகும். பொருளாதார ரீதியாகவும் நெருக்கடிகள் ஏற்படலாம். எதிலும் சிக்கனமாக இருப்பது, வீண் செலவுகளை குறைப்பது நல்லது. எந்த விஷயத்திலும் பொறுமையுடன் செயல்பட்டால் அனுகூலமான பலனை அடைய முடியும்.
மகரம்
இன்று நீங்கள் ஆரோக்கிய ரீதியாக சற்று சோர்வுடன் காணப்படுவீர்கள். சுப காரிய முயற்சிகளில் தாமதம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். கவனமாக செயல்பட்டால் எதையும் சமாளிக்க முடியும்.
கும்பம்
இன்று நீங்கள் எதிலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். வண்டி வாகனங்களால் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். வீட்டில் அமைதி குறையும். தொழில் வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து சென்றால் முன்னேற்றம் உண்டாகும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். கடன் ஓரளவு குறையும்.
மீனம்
இன்று உறவினர்களால் மனமகிழும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகும். தொழில் ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். சுபகாரியங்கள் கைகூடும்.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,