குறள் : 696
குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில
வேண்டுப வேட்பச் சொலல்
மு.வ உரை :
அரசருடையக் குறிப்பை அறிந்து தக்கக் காலத்தை எதிர்நோக்கி வெறுப்பில்லாதவற்றையும் விருப்பமானவற்றையும் அவர் விரும்புமாறுச் சொல்ல வேண்டும்.
கலைஞர் உரை :
ஒருவரின் மனநிலை எவ்வாறு உள்ளது என்பதை அறிந்து, தக்க காலத்தைத் தேர்ந்தெடுத்து, வெறுப்புக்குரியவைகளை விலக்கி, விரும்பத் தக்கதை மட்டுமே, அவர் விரும்பும் வண்ணம் சொல்ல வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை :
ஆட்சியாளருக்கு எதையேனும் சொல்ல விரும்பினால், ஆட்சியாளரின் அப்போதைய மனநிலையை அறிந்து தான் சொல்லக் கருதிய செய்திக்கு ஏற்ற சமயத்தையும் எண்ணி ஆட்சியாளருக்கு வெறுப்புத் தராததும், வேண்டியதும் ஆகிய காரியத்தை அவர் விரும்புமாறு சொல்லுக.
Kural 696
Kuripparindhu Kaalang Karudhi Veruppila
Ventupa Vetpach Cholal
Explanation :
Knowing the (kings disposition and seeking the right time (the minister) should in a pleasing manner suggest things such as are desirable and not disagreeable.
Horoscope Today: Astrological prediction for March 21, 2022
இன்றைய ராசிப்பலன் - 21.03.2022
இன்றைய பஞ்சாங்கம்
21-03-2022, பங்குனி 07, திங்கட்கிழமை, திரிதியை திதி காலை 08.20 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தி. சுவாதி நட்சத்திரம் இரவு 09.30 வரை பின்பு விசாகம். அமிர்தயோகம் இரவு 09.30 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. சங்கடஹர சதுர்த்தி விரதம். விநாயகர் - லக்ஷ்மி நரசிம்மர் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம்
காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.
Today rasi palan - 21.03.2022 | இன்றைய ராசிப்பலன் - 21.03.2022
மேஷம்
இன்று அலுவலக பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்திற்கான எதிர்பார்த்த பண உதவி எளிதில் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். பிள்ளைகள் வழியில் சுப செலவுகள் உண்டாகும்.
ரிஷபம்
இன்று இனிய செய்தி இல்லம் தேடி வரும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தரும். தொழிலில் புதிய சலுகைகளை அறிமுகபடுத்தி லாபம் பெறுவீர்கள். சுபகாரிய முயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். பயணங்களில் புதிய நட்பு ஏற்படும்.
மிதுனம்
இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். செய்யும் செயல்களில் ஆர்வமின்றி ஈடுபடுவீர்கள். உறவினர்களின் உதவியால் உங்கள் பிரச்சினைகள் குறையும். வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றம் உண்டாகும். பெரிய மனிதர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியை அளிக்கும்.
கடகம்
இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் ஒற்றுமை குறைவு உண்டாகும். தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி அதிகரிக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பேச்சில் நிதானம் தேவை.
சிம்மம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். பிள்ளைகளின் படிப்பில் மந்த நிலை நீங்கி ஆர்வம் அதிகரிக்கும். பொருளாதார பிரச்சினைகள் குறைந்து எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் நல்ல லாபம் கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.
கன்னி
இன்று உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் வீண் செலவுகள் அதிகரிக்கும். பொருளாதார நெருக்கடியால் கடன் வாங்க நேரிடலாம். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைய அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது.
துலாம்
இன்று மன உறுதியோடு பிரச்சினைகளை எதிர்கொள்வீர்கள். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் புதிய மாற்றங்களால் முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகள் படிப்பில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். மனநிம்மதி இருக்கும்.
விருச்சிகம்
இன்று நீங்கள் ஆரோக்கிய ரீதியாக மருத்துவ செலவுகள் செய்ய வேண்டி வரும். உத்தியோக சம்பந்தமான பயணங்களால் அலைச்சல் டென்ஷன் ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது. உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். தெய்வ வழிபாடு நல்லது.
தனுசு
இன்று வியாபாரம் சிறப்பாக நடைபெறும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். குடும்பத்தில் பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
மகரம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் கூடும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பணவரவு தாராளமாக இருக்கும். புதிய சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும். வேலையில் பணிச்சுமை குறையும்.
கும்பம்
இன்று உங்களுக்கு வரவேண்டிய பணவரவுகள் கிடைக்க இடையூறுகள் உண்டாகும். வண்டி வாகன பராமரிப்பிற்காக சிறு தொகை செலவிட நேரிடும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்க உணவு விஷயத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும்.
மீனம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும். செய்யும் வேலைகளில் கால தாமதம் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,