குறள் : 689
விடுமாற்றம் வேந்தர்க் குரைப்பான் வடுமாற்றம்
வாய்சோரா வன்க ணவன்
மு.வ உரை :
குற்றமானச் சொற்களை வாய் சோர்ந்தும் சொல்லாத உறுதி உடையவனே அரசன் சொல்லியனுப்பிய சொற்களை மற்ற வேந்தர்க்கு உரைக்கும் தகுதியுடையவன்.
கலைஞர் உரை :
ஓர் அரசின் கருத்தை மற்றோர் அரசுக்கு எடுத்துரைக்கும் தூதன், வாய்தவறிக்கூட, குற்றம் தோய்ந்த சொற்களைக் கூறிடாத உறுதி படைத்தவனாக இருத்தல் வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை :
தம் அரசு சொல்லிவிட்ட செய்தியை அடுத்த அரசிடம் சொல்பவன், அங்கே சந்திக்க நேரும் ஆபத்திற்கு அஞ்சி, வாய் தவறியும் தவறான செய்தியையோ, இழிவான சொற்களையோ சொல்லிவிடாத ஆற்றல் பெற்றவனாக இருக்க வேண்டும்.
Kural 689
Vitumaatram Vendharkku Uraippaan Vatumaatram
Vaaiseraa Vanka Navan
Explanation :
He alone is fit to communicate (his sovereigns) reply who possesses the firmness not to utter even inadvertently what may reflect discredit (on the latter).
Horoscope Today: Astrological prediction for March 14, 2022
இன்றைய ராசிப்பலன் - 14.03.2022
இன்றைய பஞ்சாங்கம்
14-03-2022, மாசி 30, திங்கட்கிழமை, ஏகாதசி திதி பகல் 12.06 வரை பின்பு வளர்பிறை துவாதசி. பூசம் நட்சத்திரம் இரவு 10.07 வரை பின்பு ஆயில்யம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. ஏகாதசி. பெருமாள் வழிபாடு நல்லது. காருடையான் நோன்பு இரவு 8.00 - 9.00. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம்
காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.
Today rasi palan - 14.03.2022 | இன்றைய ராசிப்பலன் - 14.03.2022
மேஷம்
இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்படலாம். பெரிய மனிதர்களின் உதவியுடன் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். பழைய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை அளிக்கும். எதிலும் சற்று சிக்கனமுடன் இருப்பது நல்லது.
ரிஷபம்
இன்று உங்களுக்கு வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளுடன் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். நண்பர்களின் ஆலோசனைகளால் தடைகள் விலகி முன்னேற்றம் அடைவீர்கள். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும்.
மிதுனம்
இன்று குடும்பத்தில் தேவையில்லாத டென்ஷன்கள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு உபாதைகள் உண்டாகும். வியாபாரத்தில் சற்று மந்த நிலை காணப்படும். உத்தியோகத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் சற்று குறையும். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும்.
கடகம்
இன்று உங்களுக்கு சுபசெலவுகள் உண்டாகும். உறவினர்களால் அனுகூலம் கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படுவார்கள். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.
சிம்மம்
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் சில இடையூறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியற்ற நிலை நிலவும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் உண்டாகும். பூர்வீக சொத்து சம்பந்தமான பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
கன்னி
இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் கல்வி விஷயமாக நல்ல செய்தி கிடைக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். தொழில் ரீதியாக புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். உத்தியோகத்தில் புதிய நபரின் அறிமுகம் கிட்டும். வருமானம் பெருகும்.
துலாம்
இன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகள் வழியில் சுப செலவுகள் உண்டாகும். பெரிய மனிதர்களின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். தொழிலில் புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும்.
விருச்சிகம்
இன்று நீங்கள் எடுத்த காரியத்தில் வெற்றி பெற கடின உழைப்பு தேவை. பிள்ளைகளின் படிப்பில் சற்று மந்த நிலை ஏற்படும். உறவினர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். வேலையில் புதிய மாற்றங்கள் உண்டாகும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து செல்வது நல்லது.
தனுசு
இன்று நீங்கள் சோர்வுடனும் சுறுசுறுப்பின்றியும் காணப்படுவீர்கள். தேவையில்லாமல் மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாகும் சூழ்நிலை உருவாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.
மகரம்
இன்று அதிகாலையிலே ஆனந்தமான செய்திகள் வந்து சேரும். உடன்பிறந்தவர்கள் மூலம் அனுகூலம் கிட்டும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். எண்ணியது நிறைவேறும்.
கும்பம்
இன்று குடும்பத்தில் உறவினர்கள் வழியில் சுபசெலவுகள் ஏற்படும். சகோதர சகோதரிகளால் அனுகூலம் கிட்டும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். பழைய கடன்கள் குறையும்.
மீனம்
இன்று உங்களுக்கு ஆரோக்கிய ரீதியாக சிறு செலவுகள் ஏற்படும். குடும்பத்தினரிடம் உள்ள கருத்து வேறுப்பாட்டால் மன சங்கடங்கள் அதிகரிக்கும். சிக்கனமாக செயல்பட்டால் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியும். சிலருக்கு உத்தியோக ரீதியான பயணங்களால் அனுகூலம் கிட்டும்.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,