குறள் : 681
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்
பண்புடைமை தூதுரைப்பான் பண்பு
மு.வ உரை :
அன்புடையவனாதல் தகுதியானக் குடிப்பிறப்பு உடையவனாதல் அரசர் விரும்பும் சிறந்த பண்பு உடையவனாதல் ஆகிய இவை தூது உரைப்பவனுடையத் தகுதிகள்.
கலைஞர் உரை :
அன்பான குணமும், புகழ்வாய்ந்த குடிப்பிறப்பும், அரசினர் பாராட்டக்கூடிய நல்ல பண்பாடும் பெற்றிருப்பதே தூதருக்குரிய தகுதிகளாகும்.
சாலமன் பாப்பையா உரை :
நாட்டு மக்கள், அரசு, உறவு இவற்றின் மீது அன்பும், நற்குணம் நிறைந்த குடிப்பிறப்பும், அரசு விரும்பும் பண்பும் கொண்டிருப்பவரே தூதர்.
Kural 681
Anputaimai Aandra Kutippiraththal Vendhavaam
Panputaimai Thoodhuraippaan Panpu
Explanation :
The qualification of an ambassador are affection (for his relations) a fitting birth and the possession of attributes pleasing to royalty.
Horoscope Today: Astrological prediction for March 06, 2022
இன்றைய ராசிப்பலன் - 06.03.2022
இன்றைய பஞ்சாங்கம்
06-03-2022, மாசி 22, ஞாயிற்றுக்கிழமை, சதுர்த்தி திதி இரவு 09.12 வரை பின்பு வளர்பிறை பஞ்சமி. அஸ்வினி நட்சத்திரம் பின்இரவு 03.51 வரை பின்பு பரணி. சித்தயோகம் பின்இரவு 03.51 வரை பின்பு பிரபலாரிஷ்ட யோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 1/2. மாத சதுர்த்தி விரதம். விநாயகர் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். வாஸ்து நாள் காலை 10.30 - 11.06.
இராகு காலம்
மாலை 04.30 - 06.00, எம கண்டம் - பகல் 12.00 - 01.30, குளிகன் - பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00, மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00.
Today rasi palan - 06.03.2022 | இன்றைய ராசிப்பலன் - 06.03.2022
மேஷம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும்.
ரிஷபம்
இன்று உங்கள் உடல் நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். உடன் பிறந்தவர்களால் குடும்பத்தில் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். ஆடம்பர செலவுகளால் கையிருப்பு குறையும். பண பற்றாக்குறையை சமாளிக்க சிக்கனமுடன் செயல்பட வேண்டும். முன் கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது.
மிதுனம்
இன்று பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபாரத்தில் புதிய நபர் அறிமுகத்தால் லாபம் பெருகும். குடும்பத்தோடு வெளியூர் பயணம் செல்வதற்கான வாய்ப்பு உருவாகும்.
கடகம்
இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். பயணங்களில் புதிய நபர் அறிமுகம் உண்டாகும். உடன் பிறந்தவர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் விலகி ஒற்றுமை கூடும். பழைய நண்பர்களை சந்திப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும்.
சிம்மம்
இன்று எடுக்கும் முயற்சிகளில் தடைகள் உண்டாகலாம். நண்பர்களுடன் சிறு மனக்கசப்பு ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பொறுப்புடன் செயல்படுவதன் மூலம் கடன்கள் ஓரளவு குறையும். பூர்வீக சொத்துகளால் அனுகூலம் கிட்டும். குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள்.
கன்னி
இன்று உங்களுக்கு தேவையில்லாத மன உளைச்சல் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் பிறரை நம்பி எந்த ஒரு பொறுப்புகளையும் கொடுக்காமல் இருப்பது நல்லது. வெளி இடங்களில் அமைதி காப்பது உத்தமம்.
துலாம்
இன்று வியாபார முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களில் அனுகூலப் பலன்கள் கிடைக்கும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் கிட்டும்.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வெளிவட்டார நட்பு ஏற்படும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் லாபம் கிட்டும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.
தனுசு
இன்று உங்களுக்கு குடும்பத்தினரால் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். தூர பயணங்களால் அலைச்சல் டென்ஷன் உண்டாகும். கையிருப்பு குறையும். உறவினர்கள் வழியில் சுப செய்திகள் வரும். பொறுமையுடன் செயல்பட்டால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். நண்பர்களின் ஆதரவு கிட்டும்.
மகரம்
இன்று உங்களுக்கு ஆரோக்கிய ரீதியாக சற்று சோர்வு மந்த நிலை ஏற்படும். உடன்பிறந்தவர்கள் வாயிலாக சுபசெலவுகள் ஏற்படலாம். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும்.
கும்பம்
இன்று உங்களுக்கு சுபசெலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தரும காரியங்கள் செய்து மனம் மகிழ்வீர்கள். திடீர் பயணம் உண்டாகும். ஆடை, ஆபரணம் வாங்குவதில் பெண்கள் ஆர்வம் காட்டுவார்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.
மீனம்
இன்று குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஏற்படும் கருத்து வேறுபாட்டால் மன நிம்மதியின்றி இருப்பீர்கள். பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகள் ஓரளவு குறையும். உற்றார் உறவினர்கள் வழியாக உதவிகள் கிட்டும்.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,