குறள் : 677
செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினை
உள்ளறிவான் உள்ளங் கொளல்
மு.வ உரை :
செயலைச் செய்கின்றவன் செய்ய வேண்டிய முறை அச் செயலின் உண்மையான இயல்பை அறிந்தவனுடையக் கருத்தைத் தான் ஏற்றுக் கொள்ளவதாகும்.
கலைஞர் உரை :
ஒரு செயலில் ஈ.டுபடுகிறவன், அச்செயல் குறித்து முழுமையாக உணர்ந்தவனின் கருத்தினை முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை :
ஒரு செயலைச் செய்யத் தொடங்குபவன் அதைச் செய்யும் முறையாவது, அச்செயலை இதற்கு முன்பு செய்திருப்பவனின் கருத்தை அறிந்து கொள்வதேயாகும்.
Kural 677
Seyvinai Seyvaan Seyanmurai Avvinai
Ullarivaan Ullam Kolal
Explanation :
The way to accomplish any task is to ascertain The inmost thoughts of an expert in that task.
Horoscope Today: Astrological prediction for March 02, 2022
இன்றைய ராசிப்பலன் - 02.03.2022
இன்றைய பஞ்சாங்கம்
02-03-2022, மாசி 18, புதன்கிழமை, அமாவாசை திதி இரவு 11.04 வரை பின்பு வளர்பிறை பிரதமை. சதயம் நட்சத்திரம் பின்இரவு 02.37 வரை பின்பு பூரட்டாதி. சித்தயோகம் பின்இரவு 02.37 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 0. சர்வ அமாவாசை. மயான கொள்ளை.
இராகு காலம்
மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00
Today rasi palan - 02.03.2022 | இன்றைய ராசிப்பலன் - 02.03.2022
மேஷம்
இன்று பிள்ளைகள் சுறுசுறுப்புடன் இருப்பார்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். நீண்ட நாள் எதிர்பார்த்த வங்கி கடன் கிட்டும். புதிய நபரின் அறிமுகத்தால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும்.
ரிஷபம்
இன்று உத்தியோகஸ்தர்கள் வேலையில் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவார்கள். கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். தொழிலில் சிறப்பான லாபம் கிட்டும். புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும்.
மிதுனம்
இன்று நீங்கள் எந்த ஒரு காரியத்திலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் ஏற்படலாம். வீண் செலவுகளால் சேமிப்பு கரையும். சிக்கனமுடன் இருப்பது நல்லது. கூட்டாளிகளின் ஆலோசனையால் தொழிலில் லாபம் கிட்டும்.
கடகம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்ய நினைக்கும் காரியங்களில் காலதாமதம் உண்டாகும். வியாபாரத்தில் மற்றவர்களை நம்பி புதிய முயற்சிகளை செய்யாமல் இருப்பது நல்லது. வெளியூர் பயணங்களை தவிர்ப்பது உத்தமம். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.
சிம்மம்
இன்று உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும். வெளியூர் பயணங்களால் வெளிவட்டார நட்பு உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். பெரிய மனிதர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாகி மகிழ்ச்சியை அளிக்கும்.
கன்னி
இன்று உங்களுக்கு மன அமைதி உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலம் கிட்டும். உற்றார் உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பழைய கடன்கள் வசூலாகும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.
துலாம்
இன்று உங்களுக்கு பணவரவு சற்று மந்தமாக இருக்கும். உற்றார் உறவினர்கள் வழியில் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலப்பலன் கிடைக்கும். புதிய நவீனகரமான கருவிகள் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும்.
விருச்சிகம்
இன்று வரவை விட செலவுகள் அதிகமாக இருக்கும். நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். தொழிலில் கூட்டாளிகளால் மனசங்கடங்கள் உண்டாகலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உற்றார் உறவினர்கள் வழியில் அனுகூலங்கள் ஏற்படும்.
தனுசு
இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். பெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் இருந்த எதிர்ப்புகள் விலகும். பிள்ளைகளின் விருப்பங்கள் நிறைவேறும். இனிய நிகழ்ச்சிகள் கைகூடி மகிழ்ச்சியை அளிக்கும்.
மகரம்
இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகளால் பொருளாதார நெருக்கடிகள் ஏற்படலாம். ஆரோக்கிய ரீதியாகவும் சிறு சிறு பாதிப்புகள் தோன்றும். குடும்பத்தினரை அனுசரித்து செல்வது நல்லது. தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
கும்பம்
இன்று குடும்பத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அதிகரிக்கும். பெண்கள் ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள், பூர்வீக சொத்துக்கள் வழியில் லாபம் கிடைக்கும். வியாபார ரீதியாக வெளிவட்டார நட்பு உண்டாகும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.
மீனம்
இன்று குடும்பத்தில் பிள்ளைகள் வழியில் வீண் செலவுகள் ஏற்படலாம். திருமண முயற்சிகளில் சற்று மந்த நிலை உண்டாகும். வாகனங்களில் செல்லும் பொழுது சற்று எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. உடன்பிறந்தவர்கள் உறுதுனையாக இருப்பார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,