ஒன்பது கிரகங்களில் முழுமையான சுப கிரகம் வியாழன் என்றழைக்கப்படும் குரு. மெத்தப் படித்த மேதாவிகளை உருவாக்குபவர் இவர் தான். கற்றல், கற்றுக் கொடுத்தல் இரண்டையும் சரிவர செய்பவரும் இவரே. ஒரு ராசியில் நின்று பார்ப்பதை குரு பார்வை என்றும் வியாழ நோக்கம் என்றும் சொல்கிறோம்.

குருவின் பார்வை எதையும் முழுமையாக்கும் எத்தனை தோஷம் இருந்தாலும் அத்தனையையும் ஒழித்து நல்லருள் புரியும். குரு பார்க்க கோடி நன்மை என்பது மகா வாக்கியம். ஒரு ஜாதகம் எவ்வளவு பலவீனமாக இருந்தாலும் சரி, குரு பார்த்து விட்டால் போதும், தானாக பலம் கிடைத்து விடும், பதப்படுத்துதல், பக்குவமாக்குதல், பலப்படுத்துதல் என்று மூன்று விஷயங்களை குருவின் பார்வை செய்கிறது.
குருபகவானுக்கு உகந்த நிறம் மஞ்சள்💛 பிடித்த தானியம் கொண்டைக்கடலை, உரிய ரத்தினம் புஷ்பராகம்.
குருவிற்கு ஏற்ற நாள் வியாழக்கிழமையாகும். அந்த நாளில் விரதம் இருந்து மாலையில் சிவன் கோயிலுக்கு செல்லலாம். அங்கு தட்சிணாமூர்த்திக்கு நடக்கும் சிறப்பு பிரார்த்தனையில் கலந்துகொண்டு பக்தர்களுக்கும் ஏழைகளுக்கும் கொண்டைக்கடலை சுண்டல் வழங்கலாம்.

வியாழக்கிழமைகளில் சொல்ல வேண்டிய குரு ஸ்லோகம் :


குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மகேஸ்வர;
குரு சாஷாத் பரப்பிரம்மா
தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ