ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. ரேஷன் கடைகள் இயங்கும் நேரம் மாற்றம்!!
ரேஷன் கடைகள் இயங்கும் நேரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ரேஷன் கடைகள் இயங்கும் நேரம் மாற்றப்பட்டதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது . சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 8:30 மணி முதல் பகல் 12 மணிவரை கடைகள் இயங்கும் என்றும் பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரையில் ரேஷன் கடைகள் இயங்கும் என்றும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னையை தவிர உள்ள இதர பகுதிகளில் காலை 9 மணி முதல் பகல் 1 மணிவரை ரேஷன் கடைகள் இயங்கும் என்றும் பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை ரேஷன் கடைகள் இயங்கும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.