11 Sub-Inspectors transferred in Ranipettai District
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 11 சப்-இன்ஸ்பெக்டர்களை பணியிடமாற்றம் செய்து, மாவட்ட எஸ்பி தீபா சத்யன் நேற்று உத்தரவிட்டார். மேலும் அவர்கள் உடனடியாக ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்களில் பணியில் சேருமாறு அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள சப்-இன்ஸ்பெக்டர்களின் விவரங்கள் வருமாறு:
சிப்காட் காவல் நிலை யத்தில் பணியாற்றி வந்த சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன், தக்கோலம் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டார். இதேபோல், அரக்கோணம் தாலுகா காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த அசோக்குமார், ஆற்காடு தாலுகா காவல் நிலையத்திற்கும். அவளூர் காவல் நிலையத்தில் பணியாற்றிய சப்-இன்ஸ்பெக்டர் சேகர், ரத்தினகிரி காவல் நிலையத்திற்கும், வாழைப்பந்தல் காவல் நிலையத்தில் பணியாற்றிய சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசலு, அரக்கோணம் தாலுகா காவல் நிலையத்திற்கும் மாற்றப்பட்டனர்.
மேலும், பாணாவரம் காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணி யாற்றிய சேட்டு. திமிரி காவல் நிலையத்திற்கும், ஆற்காடு தாலுகா காவல் நிலையத்தில் சப்-இன்ஸ் பெக்டராக பணியாற்றி வந்த ரவிச்சந்திரன், கொண்டபாளையத்திற்கு கொண்டபாளையம் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த சரவண மூர்த்தி, கலவை காவல் நிலையத்திற்கும் மாற்றப்பட்டார்.
இதேபோல், அரக்கோணம் டவுன் காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக உள்ள தாசன், சிப்காட் காவல் நிலையத்திற்கும், சிப்காட் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த ஜான் சேவியர், ராணிப்பேட்டை காவல் நிலையத்திற்கும். தக்கோலம் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்ட ராக உள்ள ஆனந்தன், அரக்கோணம் தாலுகா காவல் நிலையத்திற்கும். அவளூர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், ராணிப்பேட்டை காவல் நிலையத்திற்கும் மாற்றப்பட்டார்.