Rs.1000 / - per month for women TamilNadu Budget

1000 rs for ladies in tamil nadu Budget


மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை எப்போது? பட்ஜெட்டில் நிதியமைச்சர் சொன்ன தகவல்!


மாநில நிதிநிலை மேம்படும் போது மகளிருக்கு ரூ.1000 உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருக்கிறார். 

2022-23ம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்துவருகிறார். அப்போது மகளிருக்கு ரூ.1000 உரிமைத் தொகை திட்டம் மாநில நிதிநிலை மேம்படும் போது செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார்.

மேலும் உரிமை தொகை பெற தகுதியுடையவர்கள் யார் யார் என்பதை கண்டறியும் பணி நடைபெற்று வருவதாகவும் நிதியமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.