வல்லாரைக் கூட்டு


தேவையான பொருள்கள் அளவு
வல்லாரைக் கீரை ஒரு கட்டு
இஞ்சி (தோல் நீக்கியது) 50 கிராம்
மிளகு அரை ஸ்பூன்
சிறு பருப்பு 100 கிராம்
வெங்காயம் ஒன்று
பச்சை மிளகாய் 2
கடுகு அரை ஸ்பூன்
எண்ணெய், உப்பு தேவையான அளவு



செய்முறை :


வல்லாரைக் கீரையை ஆய்ந்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயத்தையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். சிறுபருப்பை வேக வைத்து கடைந்து கீரையுடன் நறுக்கி வைத்துள்ளதையும் சேர்த்து மீண்டும் கொதிக்க வைக்கவும். எண்ணெய்யில் கடுகு தாளித்துக் கொட்டிச் சாப்பிடவும்.

பயன்கள்


வளரும் குழந்தைகளுக்கு ஏற்ற உணவு இது. அற்புதமான நினைவாற்றலைத் தரக்கூடியது. காக்காய் வலிப்பு, நரம்புக் கோளாறுகளும் குணமாகும். மேலும் உடல் எடை அதிகரித்து அவதிப்படுபவர்கள் அவசியம் சாப்பிட வேண்டிய உணவு இது. உடல் எடையைக் குறைப்பதுடன், ரத்தத்தில் உப்பின் அளவையும் குறைக்கும். உடலில் யூரிக் அமிலம் அதிகரிக்காமல் கட்டுப்படுத்தக்கூடியது.