திருத்தணி அருகே உள்ள தாழவேடு கிராமத்தை சேர்ந்தவர் சுப்பைய்யா. இவரது மகன் தயானந்த் (17). இவர் அரக்கோணம் அரசு ஐடிஐ.,யில் பிட்டர் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று மாலை 4.15 மணிக்கு வகுப்பு நேரம் முடிந்து புளியமங்கலம் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்தார்.

அப்போது சென்னை சென்ட்ரலில் இருந்து திருத்தணிக்கு செல்லும் மின்சார ரயிலில் ஏற முயன்றார். அப்போது கால் தவறி பிளாட்பாரத்துக்குள் விழுந்த தயானந்த் மீது ரயில் மோதியது. இதில் அவர் பலத்த காயமடைந்தார். இதைப்பார்த்த பயணிகள் கூச்சலிட்டனர். அதற்குள் ரயில் புறப்பட்டு அரக்கோணம் ஸ்டேஷனுக்கு சென்றது.

இதுகுறித்து ரயில்வே போலீசாரிடம் ரயில் ஜின்டிரைவர் தெரிவித்தார். சப்இன்ஸ் பெக்டர்கள் ஆனந்தன், ராமகிருஷ்ணன் ஆகியோர் அங்கு சென்று மாணவனை மீட்டு 108 ஆம்புலன்சில் அரக்கோணம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே மாணவர் தயானந்த் இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

இதுகுறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.