குறள் : 671

சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு
தாழ்ச்சியுள் தங்குதல் தீது

மு.வ உரை :

ஆராய்ந்து எண்ணுவதற்கு எல்லை துணிவு கொள்வதே ஆகும் அவ்வாறு கொண்ட துணிவு காலந் தாழ்த்து நிற்பது குற்றமாகும்.

கலைஞர் உரை :

ஒரு செயலில் ஈ.டுபட முடிவெடுக்கும்போது அச்செயலால் விளையும் சாதக பாதகங்கள் பற்றிய ஆராய்ச்சியும் முடிவடைந்திருக்க வேண்டும். முடிவெடுத்த பிறகு காலந்தாழ்த்துவது தீதாக முடியும்.

சாலமன் பாப்பையா உரை :

ஓர் ஆலோசனையின் முடிவு, செயலைச் செய்யும் துணிவைப் பெறுவதே, பெற்ற அத்துணிவைச் செயலாக்கக் காலம் தாழ்த்தினால் அது தீமையாகும்.

Kural 671

Soozhchchi Mutivu Thuniveydhal Aththunivu
Thaazhchchiyul Thangudhal Theedhu

Explanation :

Consultation ends in forming a resolution (to act); (but) delay in the execution of that resolve is an evil.

Horoscope Today: Astrological prediction for February 23, 2022

இன்றைய ராசிப்பலன் - 23.02.2022



இன்றைய பஞ்சாங்கம்

23-02-2022, மாசி 11, புதன்கிழமை, சப்தமி திதி மாலை 04.57 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி. விசாகம் நட்சத்திரம் பகல் 02.40 வரை பின்பு அனுஷம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1/2. பைரவர் வழிபாடு நல்லது. 

இராகு காலம்

மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00 

Today rasi palan - 23.02.2022 | இன்றைய ராசிப்பலன் - 23.02.2022

மேஷம்

இன்று உங்களுக்கு மன உளைச்சல், தேவையில்லாத டென்ஷன் ஏற்படும். உங்கள் ராசிக்கு காலை 08.56 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் தாமதங்கள் உண்டாகும். வேலையில் மேலதிகாரிகளிடம் வாக்குவாதங்களை தவிர்க்கவும். சுப நிகழ்ச்சிகளை தவிர்ப்பது நல்லது.

ரிஷபம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் கிட்டும். பிள்ளைகள் மூலம் சுப செய்திகள் கிடைக்கும். சிலருக்கு புதிய வண்டி, வாகனம் வாங்கும் எண்ணம் நிறைவேறும்.

மிதுனம்

இன்று குடும்பத்தில் எதிர்பாராத இனிய நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகளால் பெருமை சேரும். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைப்பதற்கான வாய்ப்பு உருவாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் நிறைவேறும். திடீர் தனவரவு உண்டாகும்.

கடகம்

இன்று உத்தியோகத்தில் தேவையில்லாத பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. வியாபாரத்தில் சற்று மந்த நிலை காணப்படும். நண்பர்களின் உதவியால் பொருளாதார பிரச்சினைகள் சற்று குறையும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும்.

சிம்மம்

இன்று நீங்கள் செய்ய நினைக்கும் காரியங்களில் கவனமுடன் செயல்படுவது நல்லது. தொழில் சம்பந்தமான புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படலாம். பயணங்களால் அலைச்சல் சோர்வு உண்டாகும். பெரிய மனிதர்களின் அறிமுகத்தால் நற்பலன்கள் கிட்டும்.

கன்னி

இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும். உறவினர்களின் உதவியால் பிரச்சினைகள் தீரும். வேலையில் புதிய மாற்றங்கள் ஏற்படும்.

துலாம்

இன்று குடும்பத்தில் வீண் செலவுகள் ஏற்படலாம். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதமாகும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும்.

விருச்சிகம்

இன்று குடும்பத்தில் பொருளாதார ரீதியாக இருந்த நெருக்கடிகள் குறையும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் நீங்கும். எதிர்பார்த்த உதவி கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி உண்டாகும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்தால் லாபத்தை அடைய முடியும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

தனுசு

இன்று உங்களுக்கு வர வேண்டிய பணவரவில் தடை தாமதங்கள் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவ பேச்சில் கவனத்துடன் இருப்பது நல்லது. வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சியில் அனுகூலப்பலன் உண்டாகும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிட்டும்.

மகரம்

இன்று நீங்கள் எந்த செயலிலும் புது உற்சாகத்தோடு ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நிகழும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகள் வெற்றி தரும். பழைய பாக்கிகள் வசூலாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.

கும்பம்

இன்று அதிகாலையிலே ஆனந்தமான செய்திகள் வந்து சேரும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும்.

மீனம்

இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சுமாராக இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் இருந்த மன ஸ்தாபங்கள் படிப்படியாக குறையும். உங்கள் ராசிக்கு காலை 08.56 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எடுக்கும் முயற்சிகளில் இருந்த இடையூறுகள் விலகி இன்று நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

கணித்தவர்

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology, 
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,