குறள் : 666
எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்
மு.வ உரை :
எண்ணியவர் (எண்ணியபடியே செயல் ஆற்றுவதில்) உறுதியுடையவராக இருக்கப்பெற்றால் அவர் எண்ணியவற்றை எண்ணியவாறே அடைவர்.
கலைஞர் உரை :
எண்ணியதைச் செயல்படுத்துவதில் உறுதி உடையவர்களாக இருந்தால் அவர்கள் எண்ணியவாறே வெற்றி பெறுவார்கள்.
சாலமன் பாப்பையா உரை :
ஒன்றைச் செய்ய எண்ணியவர் அதைச் செய்து முடிப்பதற்கு ஏற்ற மனஉறுதியை உடையவராக இருந்தால், அடைய நினைத்தவற்றை எல்லாம் அவர் எண்ணப்படியே அடைவார்.
Kural 666
Enniya Enniyaangu Eydhu Enniyaar
Thinniyar Aakap Perin
Explanation :
If those who have planned (an undertaking) possess firmness (in executing it) they will obtain what they have desired even as they have desired it.
Horoscope Today: Astrological prediction for February 18, 2022
இன்றைய ராசிப்பலன் - 18.02.2022
இன்றைய பஞ்சாங்கம்
18-02-2022, மாசி 06, வெள்ளிக்கிழமை, துதியை திதி இரவு 10.29 வரை பின்பு தேய்பிறை திரிதியை. பூரம் நட்சத்திரம் மாலை 04.42 வரை பின்பு உத்திரம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. அம்மன் வழிபாடு நல்லது.
இராகு காலம்
பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00
இன்றைய ராசிப்பலன் - 18.02.2022 | Today rasi palan - 18.02.2022
மேஷம்
இன்று உங்களுக்கு பிள்ளைகளால் அலைச்சல் அதிகரிக்கும். வேலையில் மேலதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.
ரிஷபம்
இன்று உங்களுக்கு தொழில் வியாபார ரீதியாக வேலைபளு அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகளில் சிறு தடங்கல்கள் ஏற்படும். எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் அனுகூலப் பலன் கிட்டும்.
மிதுனம்
இன்று உங்களுக்கு பண வரவு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் குறையும். பிள்ளைகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில் ரீதியாக எதிர்ப்பார்த்த வங்கி கடன்கள் கிடைக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சேமிப்பு உயரும்.
கடகம்
இன்று குடும்பத்தில் உறவினர்கள் வழியில் வீண் செலவுகள் ஏற்படலாம். பெரிய மனிதர்களின் விரோதத்திற்கு ஆளாக நேரிடும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களால் மன சங்கடங்கள் உண்டாகும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்களின் ஆதரவு கிட்டும்.
சிம்மம்
இன்று நீங்கள் எந்த செயலையும் சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளால் ஏற்பட்ட மனகஷ்டம் நீங்கும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். வருமானம் பெருகும்.
கன்னி
இன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படும். சகோதர, சகோதரிகளுடன் சிறு மனஸ்தாபங்கள் தோன்றும். ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். தொழிலில் கூட்டாளிகளுடன் இருந்த மாற்று கருத்துக்கள் மறைந்து ஒற்றுமை ஏற்படும்.
துலாம்
இன்று நீங்கள் புது பொலிவுடனும், தெம்புடனும் காணப்படுவீர்கள். உத்தியோகத்தில் ரீதியாக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும். திருமண சுப முயற்சிகளில் முன்னேற்ற நிலை உண்டாகும். எதிர்பாராத உதவியால் பொருளாதார ரீதியாக இருந்த பிரச்சினைகள் தீரும்.
விருச்சிகம்
இன்று மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் திறமைகேற்ற வாய்ப்புகள் தேடி வரும். பாதியில் தடைப்பட்ட காரியம் மீண்டும் தொடர்வதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். புதிய வாகனம் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும்.
தனுசு
இன்று உங்களுக்கு வர வேண்டிய பணவரவுகள் தாமதமாக கிடைக்கும். எதிர்பாராத செலவுகளால் சேமிப்பு குறையும். வேலையில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். வியாபார ரீதியாக எடுக்கும் முடிவுகளை யோசித்து எடுத்தால் முன்னேற்றம் ஏற்படும்.
மகரம்
இன்று உங்களுக்கு வீண் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. மற்றவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கவனம் தேவை.
கும்பம்
இன்று நீங்கள் எந்த செயலையும் மன உறுதியோடு செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி கிட்டும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாகும்.
மீனம்
இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மனம் மகிழும் மாற்றங்கள் உண்டாகும். உறவினர்களால் அனுகூலம் கிட்டும். பணவரவு பல வழிகளில் வரும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும்.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,