குறள் : 660
சலத்தாற் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்
கலத்துணீர் பெய்திரீஇ யற்று
மு.வ உரை :
வஞ்சனையான வழியால் பொருளைச்சேர்த்துக் காப்பாற்றுதல் பச்சை மண்கலத்தில் நீரை விட்டு அதைக் காப்பாற்றி வைத்தாற் போன்றது.
கலைஞர் உரை :
தவறான வழிகளில் பொருளைச் சேர்த்து அதைக் காப்பாற்ற நினைப்பது, பச்சை மண்ணால் செய்யப்பட்ட பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதைப் பாதுகாக்க நினைப்பதைப் போன்றதுதான்.
சாலமன் பாப்பையா உரை :
தீய செயல்களால் பொருளைத் திரட்டி, அதைக் காப்பது, சுடாத பச்சைமண் பானையில் நீரை ஊற்றி அதைச் சேமிப்பது போலாம்.
Kural 660
Salaththaal Porulseydhe Maarththal Pasuman
Kalaththulneer Peydhireei Yatru
Explanation :
(For a minister) to protect (his king) with wealth obtained by foul means is like preserving a vessel of wet clay by filling it with water.
Horoscope Today: Astrological prediction for February 12, 2022
இன்றைய ராசிப்பலன் - 12.02.2022
Today rasi palan - 12.02.2022
இன்றைய பஞ்சாங்கம்
12-02-2022, தை 30, சனிக்கிழமை, ஏகாதசி திதி மாலை 04.28 வரை பின்பு வளர்பிறை துவாதசி. மிருகசீரிஷம் நட்சத்திரம் காலை 06.37 வரை பின்பு திருவாதிரை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. ஏகாதசி விரதம். பெருமாள் வழிபாடு நல்லது.
இராகு காலம்
காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் - காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.
இன்றைய ராசிப்பலன் - 12.02.2022
மேஷம்
இன்று குடும்பத்தில் சுபகாரியங்கள் எளிதில் நடைபெறும். தொழில் வளர்ச்சிக்காக நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். உடல் நலம் சீராக இருக்கும். வெளியில் இருந்து வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும். வேலையில் சக ஊழியர்கள் ஒற்றுமையோடு செயல்படுவார்கள்.
ரிஷபம்
இன்று வெளியூர் பயணங்களால் தேவையற்ற அலைச்சல் ஏற்படலாம். எதிர்பாராத செலவுகளை சமாளிக்க கடன் வாங்கும் நிலை உருவாகும். மன உறுதியோடு பிரச்சினைகளை எதிர் கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய மாற்றங்களை செய்வதன் மூலம் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம்.
மிதுனம்
இன்று குடும்பத்தில் அமைதி நிலவும். பெரியவர்களோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் வளர்ச்சிக்காக போட்ட புதிய திட்டங்கள் வெற்றியை தரும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
கடகம்
இன்று உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். உற்றார் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் வீண் செலவுகள் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் தடை தாமதங்கள் உண்டாகலாம். சிந்தித்து செயல்பட்டால் தொழிலில் நல்ல முன்னேற்றத்தை காணலாம்.
சிம்மம்
இன்று நீங்கள் எந்த செயலையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு மகிழ்ச்சியை தரும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். பிள்ளைகளால் பெருமை சேரும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பழைய கடன்கள் வசூலாகும்.
கன்னி
இன்று குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பணவரவு தாராளமாக இருப்பதால் வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். பிள்ளைகளின் விருப்பங்கள் நிறைவேறும். தொழிலில் கூட்டாளிகளுடன் பேச்சுவார்த்தைகளில் அனுகூலப்பலன் கிட்டும். வேலையில் சிலருக்கு பதவி உயர்வுகள் கிடைக்கும்.
துலாம்
இன்று எடுத்த காரியம் வெற்றி பெற சற்று கூடுதல் முயற்சி தேவை. குடும்பத்தினருடன் மாற்று கருத்துக்கள் ஏற்படலாம். தெய்வீக காரியங்கள் செய்து ஆனந்தம் அடைவீர்கள். தொழிலில் ஏற்பட்ட புதிய மாற்றங்களால் லாபம் பெருகும். பெரிய மனிதர்களின் சந்திப்பால் அனுகூலம் உண்டாகும்.
விருச்சிகம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும். செய்யும் வேலைகளில் காலதாமதம் ஏற்படும். புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். தூர பயணங்களில் கவனம் தேவை.
தனுசு
இன்று இனிய செய்தி இல்லம் தேடி வரும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தரும். பூர்வீக சொத்துகளால் அனுகூலப்பலன் கிட்டும். உத்தியோக ரீதியாக வெளிவட்டார நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் உங்கள் பெயர் புகழ் செல்வாக்கு மேலோங்கும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.
மகரம்
இன்று உறவினர்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணப்பிரச்சினை குறையும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். புதிய வாகனம் வாங்கி மகிழ்வீர்கள். சுபகாரியங்கள் கைகூடும்.
கும்பம்
இன்று உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் நெருக்கடிகள் ஏற்படலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபார ரீதியாக கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. எடுக்கும் முயற்சிகளுக்கு பெரியவர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். கையிருப்பு சற்று குறையும்.
மீனம்
இன்று பணவரவு சுமாராக இருக்கும். வாகனங்களால் விரயங்கள் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் டென்ஷன் உண்டாகலாம். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைய கடின உழைப்பு தேவை. நண்பர்களால் அனுகூலம் கிட்டும். வேலையில் அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,