ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சிகள், 8 டவுன் பஞ்சாயத்துகளில் வார்டு கவுன்சிலர்களுக்கான தேர்தல் வரும் 19ம் தேதி நடக்கிறது. இதையொட்டி வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன், வாக்காளர்களுக்கு புடவை, ஜாக்கெட் பிட், டவல், டிவி, கட்டில் என அன்பளிப்புகளை வழங்கி ஓட்டு சேகரித்து வருகின்றனர்.

இதுபோன்று வாக்காளர்களுக்கு வழங்கப்படும் அன்பளிப்பு மற்றும் வாகனங்களில் எடுத்துச் செல்லப்படும் பரிசு பொருட்களை தேர்தல் பறக்கும்படையினர் நடத்தும் ரெய்டில் சிக்கிவிடுகிறது. அதன்படி, மாவட்டம் முழுவதும் 42 பறக்கும் படையினர் தனித்தனி குழுக்களாக பிரிந்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாவட்டத்தில் நேற்று முன் தினம் வரை பறக்கும் படையினர் நடத்திய ரெய்டில் உரிய ஆவணங்கள் இன்றி வாகனங்களில் கொண்டு சென்றதாக ரூ.6 லட்சத்து 87 ஆயிரத்து 690 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட் டுள்ளது. அத்துடன், வாக்காளர் களுக்கு கொடுப்பதற்காக கொண்டு சென்ற டிவிக்கள், கட்டில்கள், புடவை, ஜாக்கட் துண்டுகள், டவல்கள் ஆகியனவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், மாவட்டத்தில் 85 சதவீத வாக்காளர்களுக்கு பூத் ஸ்லிப் வழங்கப்பட்டுவிட்டதாகவும் கலெக்டர் பாஸ்கரபாண் டியன் தெரிவித்துள்ளார்.