மாவட்டங்களின் பெயர் களை 17 நொடிகளில் கூறி சாதனை படைத்த சிறுமிக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பாராட்டு தெரிவித்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு பகுதியை சேர்ந்தவர் சிறுமி கனிஷ்கா சிவானி (7). பரதராமியில் உள்ள தனியார் பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வருகிறார்.

இவர், தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களின் பெயர்களை 17 நொடிகளில் உச்சரித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். இதனை அறிந்த ஜாக்கி புக் ஆப் ரெக்கார்ட்ஸ், சிறுமி கனிஷ்கா சிவானியின் பெயரை சாதனை பட்டியலில் பதிவு செய்தது. இந்நிலையில், ஜாக்கி புக் ஆப் ரெக்கார்ட்ஸ்சில் இடம் பிடித்த கனிஷ்கா சிவானி தனக்கு வழங்கப்பட்ட சான்றிதழை நேற்று கலெக்டர் பாஸ்கர பாண்டியனிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார். சிறுமியின் அறிவுத்திறனை கேட்டு கலெக்டர் பாராட்டு தெரிவித்தார்.

CONGRATULATIONS  S.KANISHKA SHIVANI 

Arcot, Ranipet District, Tamilnadu, India,
FASTEST TO RECITE DISTRICT NAMES OF TAMILNADU 

Recited district names of Tamilnadu ( 38 Districts) in 17 Seconds.

Jackhibookofworldrecords.com