குறள் : 676

முடிவும் இடையூறும் முற்றியாங் கெய்தும்
படுபயனும் பார்த்துச் செயல்

மு.வ உரை :

செயலை முடிக்கும் வகையும் வரக்கூடிய இடையூறும் முடிந்த போது கிடைக்கும் பெரும்பயனும் ஆகியவற்றை ஆராய்ந்து செய்ய வேண்டும்.

கலைஞர் உரை :

ஈடுபடக்கூடிய ஒரு செயலால் எதிர்பார்க்கப்படும் பயன், அதற்கான முயற்சிக்கு இடையே வரும் தடைகள், அச்செயலாற்றுதவற்கான முறை ஆகிய அனைத்தையும் முதலில் ஆராய்ந்து அறிந்து கொள்ள வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை :

ஒரு செயலைச் செய்யும்போது அது முடிவதற்கான முயற்சி, இடையில் வரும் தடை, முடியும்போது அடையும் பெரும்பயன் ஆகியவற்றை எண்ணிப் பார்த்துச் செய்க.

Kural 676

Mutivum Itaiyoorum Mutriyaangu Eydhum
Patupayanum Paarththuch Cheyal

Explanation :

Discern a deeds outcome obstacles and opulent earnings Successful effort affirms then act.

Horoscope Today: Astrological prediction for March 01, 2022

இன்றைய ராசிப்பலன் - 01.03.2022


இன்றைய பஞ்சாங்கம்

01-03-2022, மாசி 17, செவ்வாய்க்கிழமை, தேய்பிறை சதுர்த்தசி திதி பின்இரவு 01.00 வரை பின்பு அமாவாசை. அவிட்டம் நட்சத்திரம் பின்இரவு 03.48 வரை பின்பு சதயம். சித்தயோகம் பின்இரவு 03.48 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 0. மஹா சிவராத்திரி. சிவ வழிபாடு நல்லது. கரி நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம்

மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.
 

Today rasi palan - 01.03.2022 | இன்றைய ராசிப்பலன் - 01.03.2022

மேஷம்

இன்று குடும்பத்தில் உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பெற்றோரின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் அனுகூலப் பலன் கிடைக்கும். தொழில் சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி கிட்டும்.

ரிஷபம்

இன்று எந்த காரியத்திலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். தொழிலில் கூட்டாளிகள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் நல்ல வாய்ப்புகள் கிட்டும்.

மிதுனம்

இன்று உங்கள் ராசிக்கு மாலை 04.31 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எளிதில் முடிய வேண்டிய காரியம் கூட காலதாமதமாகும். ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. பயணங்களையும், புதிய முயற்சிகளையும் தள்ளி வைப்பது நல்லது.

கடகம்

இன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். இன்று உங்கள் ராசிக்கு மாலை 04.31 க்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் சற்று நிதானத்துடன் இருப்பது நல்லது. கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனம் தேவை.

சிம்மம்

இன்று உங்களுக்கு உறவினர்களின் வருகையால் அனுகூலங்கள் உண்டாகும். எதிர்பார்த்த காரியம் எளிதில் நிறைவேறும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக மாறும் சூழ்நிலை உருவாகும். பணப் பிரச்சினைகள் சற்று குறையும்.

கன்னி

இன்று வியாபாரத்தில் எதிர்பாராத பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். உறவினர்கள் வழியில் குடும்பத்தில் வீண் செலவுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உத்தியோக ரீதியான பயணங்களில் அலைச்சலுக்கேற்ப பலன் கிட்டும். நண்பர்கள் தேவை அறிந்து உதவுவார்கள்.

துலாம்

இன்று உங்கள் உடல்நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். குடும்பத்தில் நிம்மதி குறையக்கூடிய சூழ்நிலை உருவாகும். உடன்பிறப்புகளால் மனசங்கடங்கள் ஏற்படலாம். தொழிலில் வேலையாட்களை அனுசரித்து சென்றால் முன்னேற்றத்தை காணலாம். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகரிக்கும்.

விருச்சிகம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலம் கிட்டும். வியாபாரத்தில் கூட்டாளிகளோடு ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். வேலையில் இருந்த போட்டி பொறாமைகள் விலகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

தனுசு

இன்று உங்கள் பொருளாதார நிலையும், ஆரோக்கியமும் சற்று மந்தமாக இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்படலாம். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெற உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் நற்பலன்கள் கிட்டும்.

மகரம்

இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். நவீன பொருட்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். சாதுர்யமாக செயல்பட்டால் தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி அடைய கூடிய புதிய வாய்ப்புகள் உருவாகும்.

கும்பம்

இன்று உங்களுக்கு எளிதில் முடிய வேண்டிய காரியம் கூட காலதாமதமாகும். தேவையில்லாத செலவுகளால் கையிருப்பு குறையும். பணபற்றாக்குறையை சமாளிக்க சிக்கனத்தை கடைப்பிடிப்பது நல்லது. அனுபவமுள்ளவர்களின் ஆலோசனைகளால் தொழிலில் பல புதிய மாற்றங்கள் உண்டாகும்.

மீனம்

இன்று வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக அமையும். எடுக்கும் முயற்சிகள் யாவும் வெற்றியை தரும். பெண்கள் ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

கணித்தவர்

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,