வாலாஜாவில் உள்ள கன்னாரத்தெருவில் காளிகாம் பாள் கோயில் உள்ளது. விஸ்வகர்மா சமுதாயத் தினரால் கடந்த 300 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோயில் கட்டப்பட்டது. 5நிலை ராஜகோபுரம் கொண்ட இந்தக்கோயில் நகரின் நடுநாயகமாக உள்ளது. இந்த கோயிலில் காளிகாம்பாள் பத்மாசனத்தில் அமர்ந்தும், விராட் விஸ்வேஸ்வரர் ஸ்தூல சொரூபமாகவும் காட்சியளிக்கிறார்.

இதேபோல் ஆதிகாமாட்சி, ஈஸ்வர சன்னதி, பாலஆஞ்சநேயர், நவகிரகம், வன்னியமர விநாயகர் உள்ளிட்ட பல்வேறு சன்னதிகள் உள்ளது. அனைத்து சன்னதிகளும் புதுப்பிக்கப்பட்டு திருப்பணிகள் செய்யப்பட்டது. இதற்கான கும்பாபிஷேகம் பூஜைகள் இன்று தொடங்குகிறது. காலை மங்கல இசையுடன் கோபூஜை, வர பூஜை, மஹாலஷ்மி, நவகிரகயாகங்கள் நடைபெறுகிறது.

பிற்பகல் 2மணிக்கு அனைத்து தெய்வங்களும், ராஜகோபுர கலசங்களின் கரிக்கோல யாத்திரை நடைபெறுகிறது. நாளை காலை 8மணிக்கு 2ம் கால யாக பூஜையும், நூதன பிம்ப பிரதிஷ்டை, அஷ்ட பந்தன மருந்து சாத்துதல் நடைபெறுகிறது.

தொடர்ந்து வரும் 6ந்தேதி காலை 8மணிக்கு கலச புறப்பாடும். ஸ்ரீநந்தல் மடாலய 85வது பீடாதிபதி ஸ்ரீசிவராஜ ஞாணாச்சார்ய குருசு வாமிகள் தலைமையில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

இதில் வித்யா உபா சகர் ஜோதிமுருகாச் சாரியார் மற்றும் பிரகாஷ்சர்மா ஆகியோர் தலைமையிலான வேத விற்பன்னர்கள் கும்பாபி ஷேகம் மற்றும் பல்வேறு பூஜைகளை செய்கின்றனர். கும்பாபிஷேக விழாவில் அமைச்சர் காந்தி மற்றும் விஸ்வாஸ் தொண்டு நிறுவன தலைவர் கமலா காந்தி மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்கின்றனர்.

வரும் 7ந்தேதி கலை மாமணி ஷன்மதி தலைமையிலான நடராஜபெருமான் நாட்டியப்பள்ளி மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை காளிகாம்பாள் கோயில் விஸ்வகர்மா டிரஸ்ட் மற்றும் விஸ்வ கர்மா சமூகத்தினர் செய்து வருகின்றனர்.