வேட்புமனு தாக்கல் செய்வது எப்படி? Vetpu Manu Thakkal Seivathu Eppadi in Tamil ?


தமிழகத்தி வரும் பிப்ரவரி மாதம் 19-ம் நாள் நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஜனவரி 28 தொடங்கி, பிப்ரவரி 04-ம் தேதி வரை நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து பிப்ரவரி 05-ம் தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெறுகிறது. அதன் பிறகு வேட்புமனுவைத் திரும்பப் பெற பிப்ரவரி 07ம் தேதி கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்வது எப்படி? என்று பார்க்கலாம்.

வேட்புமனு தாக்கல் செய்ய தேவையான ஆவணங்கள்:


உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடப் படிவம் 3 (வேட்புமனு படிவம்), படிவம் 3-A (உறுதி மொழி ஆவணம்), படிவம் 3-A யின் சுருக்கப் படிவம் மற்றும் வேட்பாளர் கையேடு (நகர்ப்புறம்) ஆகியவற்றை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.

படிவம் 3 (வேட்புமனு படிவம்) என்பது முன்மொழிபவர், வேட்பாளர் விவரம், வேட்பாளரது உறுதிமொழி, வேட்பு மனுவினை பெற்றுக்கொண்டதுக்கான ஒப்புதலும், ஆய்வு குறித்த அறிவிப்பு. போன்ற விவரங்களை பூர்த்தி செய்யும் படிவமாகும்.

படிவம் 3-A (உறுதி மொழி ஆவணம்) என்பது தேர்தல் நடத்தும் அலுவலர் முன்பாக வேட்பாளர் வேட்பு மனுவுடன் சேர்த்து தாக்கல் செய்ய வேண்டிய உறுதிமொழி ஆவணம் ஆகும்.

படிவம் 3-A யின் சுருக்கப் படிவம் என்பது வேட்பாளர் வேட்புமனு தாக்கலின்போது படிவம் 3 (வேட்பு மனு) மற்றும் படிவம் 3-A (உறுதிமொழி ஆவணம்) ஆகியவற்றுடன் சேர்த்து தாக்கல் செய்ய வேண்டிய வேட்ப்பாளர்களின் தகவல் குறித்த சுருக்கமாகும். இந்த மூன்று ஆவணங்களையும் டவுன்லோடு செய்ய கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

அதிகாரப்பூர்வ இணையதளம் https://tnsec.tn.nic.in/
1. வேட்புமனு
படிவம் 3 (வேட்புமனு படிவம்) DOWNLOAD HERE>>
படிவம் 3-A (உறுதி மொழி ஆவணம்)DOWNLOAD HERE>>
படிவம் 3-A யின் சுருக்கப் படிவம்DOWNLOAD HERE>>
2. வேட்பாளர் கையேடு (ஊரகம்)DOWNLOAD HERE>>
மேல் கூறப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களையும் பூர்த்தி செய்து வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும்.