ராணிப்பேட்டை மாவட்டத்தில் சுற்றுச்சூழல் மாசு ஏற்படும் வகையில் பிளாஸ்டிக், ரப்பர் கழிவுகளை எரித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்ப டும். என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
இதுகுறித்து ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நாளில் பழையன கழிதல் என்கிற வழக்கத்தின் அடையாள மாக பழைய பொருட்களான கிழிந்த ஆடைகள், பாய்கள், தேய்ந்ததுடைப் பான்கள், தேவையற்ற விவசாயக் கழிவுகள் ஆகி யவை தீ வைத்து எரிக்கப்படும். இப்பழக்கம் சுற்றுச் சூழலுக்கு பெரும் தீமை ஏற்படுத்தாது. ஆனால் சமீப காலமாக போகிப் பண்டிகையன்று மக்கள் நெருக்கம் மிகுந்த நகரப் பகுதிகளில் பிளாஸ்டிக், ரப்பர் மற்றும் செயற்கை பொருட்களை தீ வைத்து எரிக்கப்படுகிறது. இதனால் நச்சுப் புகை வெளியேறி மக்களுக்கு சுவாச நோய்கள், இருமல், நுரையீரல் பாதிப்பு, கண், மூக்கு எரிச்சல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்துகிறது.
மேலும், நச்சுப்புகைகலந்த பனி மூட்டத்தால் சாலை போக்குவரத்தில் தடை ஏற்படுகிறது. இத்தகைய செயல்கள் மூலமாக காற்று மாசு ஏற்படுத்துவது சட்டப்படி குற்றமாகும். சுற்றுச் சூழல் பாதிப்பு ஏற்படுத்தும் பொருட்களை எரிக்க உயர்நீதி மன்றம் தடை விதித்துள்ளது. எனவே, பிளாஸ்டிக், ரப்பர் உள்ளிட்ட கழிவுகளை எரிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், குப்பைகளை சேர்த்து நகர திடக்கழிவு பணியாளர்கள் மூலம் அப்புறப்படுத்தி காற்று மாசு ஏற்படுத்தாத வகையில் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.