நெல்லிக்காய் துவையல்
தேவையான பொருள்கள் : | அளவு |
---|---|
முழு நெல்லி | 4 |
காய்ந்த மிளகாய் | 8 |
உளுத்தம் பருப்பு | 10 கிராம் |
கடுகு | 5 கிராம் |
பெருங்காயம் | 2 கிராம் |
நல்லெண்ணெய் | தேவையான அளவு |
உப்பு | தேவையான அளவு |
கறிவேப்பிலை | ஒரு கைப்பிடி |
செய்முறை :
நெல்லிக்காயைக் கொட்டை நீக்கி எண்ணெய்யில் போட்டு வதக்கவும். பிறகு உளுத்தம்பருப்பு மற்றும் காய்ந்த மிளகாய் இரண்டையும் வதக்கவும். முதலில் நெல்லிக்காயை விழுதாக அரைத்து எடுத்து அதனுடன் வதக்கிய உளுந்து, காய்ந்த மிளகாய், பெருங்காயம், உப்பு ஆகியவற்றை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பிறகு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு அதில் கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலையைச் சேர்த்து கடுகு பொரியும் சமயம் அரைத்து வைத்துள்ள விழுதை வாணலியில் போட்டு நன்றாகக் கிளறவும்.