தமிழத்தில் இன்று 30,580 பேருக்கு தொற்று...

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இன்றைய கொரோனா பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

அதன்படி, ‘தமிழ்நாட்டில் இன்று 1,57,732 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், 30,580 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு 31,33,990 ஆக அதிகரித்துள்ளது. இன்று கொரோனாவால் 40 பேர் உயிரிழப்பு. இன்று 24,283 பேர் குணமடைந்துள்ளனர்.