வாலாஜா அருகே சாராயம் விற்பனையில் ஈடுபட்டவரை போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
வாலாஜா தாலுகா, சாம்பசிவபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அருள்(44). இவரை சாராயம் விற்பனை செய்த வழக்கில் வாலாஜா தாலுகா மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார், கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்தனர்.

இந்நிலையில், தொடர்ந்து சாராயம் விற்பனையில் ஈடுபட்டு வந்த அருளை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய எஸ்பி தீபா சத்யன் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். 

அதன்பேரில், அருளை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேற்று உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார். அருளை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.