ராணிப்பேட்டை மாவட்டத்தில் குடியரசு தின விழாவையொட்டி பலத்த போலீஸ் பாது காப்பு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளதாக எஸ்பி தீபா சத்யன் தெரிவித்தார்.
நாடு முழுவதும் குடியரசு தின விழா வரும் 26ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை யொட்டி, டெல்லி, தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டத்திலும் குடியரசு தின விழா கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்ட எஸ்பி தீபா சத்யன் நேற்று மாலை அரக்கோணம் தாலுகா காவல் நிலையத்திற்கு திடீரென வந்தார். பின்னர் அவர், குடியரசு தின விழா பாதுகாப்பு ஏற் பாடுகள். நிலுவையில் உள்ள வழக்கு விபரங்கள் குறித்து கேட்டறிந்து, அவற்றை விரைந்து முடிக்கவும் உத்தரவிட்டார்.
ஆய்வின் போது டிஎஸ்பி புகழேந்தி கணேஷ் உடனிருந்தார். இதைத்தொடர்ந்து, எஸ்பி தீபா சத்யன் நிருபர்களிடம் கூறுகையில், 'ராணிப்பேட்டை மாவட்டத்தில் குடியரசு தின விழாவையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற் பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அரக்கோணம் மற்றும் ராணிப்பேட்டை என 2 டிஎஸ்பிக்கள், 15 இன்ஸ்பெக்டர்கள், 52 சப்-இன்ஸ் பெக்டர் மற்றும் போலீசார் என 400க்கும் மேற்பட்டோர் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.
மேலும், மெட்டல் டிடெக்டர் மற்றும் மோப்பநாய் உதவியுடன் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில், ரயில் மற்றும் பஸ் நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீவிர சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால், யாரும் அச்சப் பட வேண்டியதில்லை. சந்தேகப்படும்படியான நபர்களின் நடமாட்டம் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கலாம்.
மாவட்டம் முழுவதும் 12 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பிற்கு பிறகே வாகனங்கள் அனும திக்கப்படும். பொது மக்கள் அனைவரும் கொரோனா விதிமுறைகளை பின்பற்றுங்கள். கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்' என்றார்.