ராணிப்பேட்டை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 19ம் தேதி நடக்கிறது. வேட்பு மனு நேற்று தாக்கல் நேற்று முன்தினம் ஆரம்பமானது. ஓட்டுக்கு பணம், பொருட்கள் கொடுப்பதை தடுப்பதற்கு மாவட்ட கலெக்டர் பறக்கும்படைகளை அமைத்துள்ளார்.
மாவட்டத்தில் உள்ள அரக்கோணம், சோளிங்கர், வாலாஜாபேட்டை, ராணிப்பேட்டை, ஆற்காடு, மேல் விஷாரம் ஆகிய ஆறு நகராட்சிகளுக்கு தாலா மூன்று பறக்கும் படைகள் என்று மொத்தம் 18 படைகள் அமைக்கப்பட்டுள்ளன. நெமிலி, தக்கோலம், பனப்பாக்கம், கலவை, திமிரி, காவேரிப்பாக்கம், விளாப்பாக்கம், அம்மூர் ஆகிய எட்டு டவுன்பஞ் சாயத்துக்களுக்கு தலா மூன்று பறக்கும்படைகள் என்று மொத்தம் 24 படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த பறக்கும் படையினர் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கார், லோடு ஆட்டோக்கள், மினி லாரிகள் என்று அனைத்து வாகனங்களை யும் மடக்கி..மடக்கி.. சோதனை செய்கின்றனர்.
பணம், பரிசுப்பொருட்கள் எடுத்துச் செல்லப்படுகிறதா? என்று கண்காணிக்கின்றனர். இருந்தாலும் எப்படி பணத்தையும், பொருட்களையும் வாக்காளர்களுக்கு கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று அரசியல் கட்சியினருக்கு தெரியும் என்று மக்கள் பேசிக்கொள்கின்றனர்.