கோடை காலங்களில் வன விலங்குகள் மற்றும் ஆடுமாடுகள் தாகத்தைத் தீர்க்க ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை அடுத்த காஞ்சனகிரி மலை அடிவாரத்தில் தடுப்பணை அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

ராணிப்பேட்டை அடுத்த காஞ்சனகிரிமலை அடிவாரத்தில் கோடை காலங்களில் வனவிலங்குகள் மற்றும் ஆடுமாடுகள் தாகத்தைத்தீர்க்க லாலாப்பேட்டை ஊராட்சி மன்ற பொது நிதியில்10 மீட்டர் நீளத்திலும் 5 அடி அகலத்திலும் 6 அடி உயரத்தில் தடுப்பணை அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதனால் கோடை காலங்களில் காஞ்சனகிரி மலை மீதும் மலை அடிவாரத்திலும் சுற்றித்திரியும் வனவிலங்குகள் மற்றும் ஆடு மாடுகள் தாகத்தை தீர்க்கும் என்பதில் ஐயமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.