மகளிர் தின விழாவில் பங்கேற்க தமிழ் படைப் பாளர் சங்கம் சார்பில் நடிகை ரோஜாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
தமிழ் படைப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் மார்ச் மாதம் மகளிர் தின விழா அரக்கோணத்தில் நடத்தப் படவுள்ளது. விழாவுக்கு தலைமையேற்று விருதுகள் வழங்குவதற்காக திரைப்பட நடிகையும், நகரி எம்எல் ஏவுமான ரோஜா மற்றும் அவரது கணவரும் டைரக் டருமான செல்வமணி ஆகியோருக்கு நேரில் அழைப்பு விடுக்கப்பட்டது.
இதில் தமிழ் படைப்பாளர் சங்கத்தின் கவுரவ ஆலோசகர் வெங்கட்ரமணன், அரக்கோணம் ரோட்டரி கிளப் தலைவரும் தமிழ் படைப்பாளர் சங்கத்தின் இணை செயலாளருமான பத்மநாபன், படைப்பாளர் சங்கத்தின் தலைவரும், எழுத்தாளருமான மோகன், நிர்வாகிகள் புவனேஸ்வரி, மகேஸ்வரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.