குறள் : 641

நாநல மென்னும் நலனுடைமை அந்நலம்
யாநலத் துள்ளதூஉம் அன்று

மு.வ உரை :

நாவன்மையாகிய நலம் ஒருவகைச் செல்வம் ஆகும் அந்த நாநலம் தனிச்சிறப்புடையது ஆகையால் மற்ற எந்த நலங்களிலும் அடங்குவது அன்று.

கலைஞர் உரை :

சொல்வன்மைக்கு உள்ள சிறப்பு வேறு எதற்குமில்லை. எனவே அது செல்வங்களில் எல்லாம் சிறந்த செல்வமாகும்.

சாலமன் பாப்பையா உரை :

நாவினால் பேசிக் காரியத்தை வெற்றிகரமாக முடிக்கும் திறமை என்னும் சிறப்பு வேறு எந்தச் சிறப்பிலும் அடங்காத தனிச்சிறப்பாகும்.

Kural 641

Naanalam Ennum Nalanutaimai Annalam
Yaanalaththu Ulladhooum Andru

Explanation :

The possession of that goodness which is called the goodness of speech is (even to others) better than any other goodness.

இன்றைய பஞ்சாங்கம்

24-01-2022, தை 11, திங்கட்கிழமை, சஷ்டி திதி காலை 08.44 வரை பின்பு தேய்பிறை சப்தமி. அஸ்தம் நட்சத்திரம் பகல் 11.15 வரை பின்பு சித்திரை. சித்தயோகம் பகல் 11.15 வரை பின்பு பிரபலாரிஷ்ட யோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1/2. கரி நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். 

இராகு காலம்

காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00. 

இன்றைய ராசிப்பலன் - 24.01.2022 | Today rasi palan - 24.01.2022

மேஷம்

இன்று நீங்கள் எந்த வேலையையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். பொருளாதார ரீதியான நெருக்கடிகள் குறையும்.

ரிஷபம்

இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகலாம். சகோதர, சகோதரிகள் வழியில் மனசங்கடங்கள் ஏற்படும். புதிய பொருட்கள் வாங்கும் முயற்சியில் சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழிலில் எதிரிகளால் இருந்த தொல்லைகள் குறையும். தெய்வ வழிபாடு நன்மை தரும்.

மிதுனம்

இன்று பிள்ளைகளால் வீண் செலவுகள் செய்யும் சூழ்நிலை ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் அதிகரிக்ககூடும். உற்றார் உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். வேலையில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

கடகம்

இன்று உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். குடும்பத்தில் பிள்ளைகளால் ஏற்பட்ட மனகஷ்டங்கள் குறையும். உற்றார் உறவினர்கள் வழியில் சுபசெய்திகள் கிடைக்கும். வியாபாரத்தில் நண்பர்களின் ஆலோசனைகள் நற்பலனை தரும். பெற்றோரின் அன்பும் ஆதரவும் கிட்டும்.

சிம்மம்

இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு உபாதைகள் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை குறையும் சூழ்நிலை உருவாகும். பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு நம்பிக்கையை கொடுக்கும். பெற்றோரின் அன்பும் ஆதரவும் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

கன்னி

இன்று உங்களுக்கு இருந்த மன உளைச்சல்கள் குறைந்து நிம்மதி ஏற்படும். உறவினர்கள் உறுதுணையாக இருப்பார்கள். செலவுகள் குறைந்து சேமிக்க முடியும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் அனுகூலம் கிட்டும். வியாபார ரீதியாக கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும்.

துலாம்

இன்று வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே ஏற்படும் வாக்குவாதங்களால் நிம்மதி குறையும். பேச்சில் நிதானம் தேவை. புதிய தொழில் தொடங்குவதற்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். 

விருச்சிகம்

இன்று உங்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். பூர்வீக சொத்துக்கள் வழியில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உறவினர்கள் தேவையறிந்து உதவுவார்கள். தொழில் சம்பந்தமான வங்கி கடன்கள் எளிதில் கிடைக்கும். சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

தனுசு

இன்று தொழில் வியாபாரத்தில் புதிய நபரின் அறிமுகத்தால் புதிய அனுபவங்கள் ஏற்படும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். குடும்பத்துடன் தூர பயணம் செல்லும் வாய்ப்பு உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும்.

மகரம்

இன்று குடும்பத்தில் தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். உடன் பிறந்தவர்களிடம் வீண் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். பொறுப்புடன் நடந்துக்கொள்வதன் மூலம் பணப் பிரச்சினையை தவிர்க்கலாம். அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிட்டும்.

கும்பம்

இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் தாமதம் உண்டாகும். தொழில் ரீதியான புதிய முயற்சிகளை தவிர்ப்பது உத்தமம். வெளியூர் பயணங்களில் கவனம் தேவை. வீண் பேச்சை குறைப்பது நல்லது.

மீனம்

இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடியே செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் ஏற்படும். திருமண சம்பந்தமான பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். வேலையில் புதிய மாற்றங்களால் மகிழ்ச்சி உண்டாகும்.

கணித்தவர்

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology. 
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,