👉 1931ஆம் ஆண்டு அக்டோபர் 18ஆம் தேதி உலக வரலாற்றில் அதிக கண்டுபிடிப்புகளை கண்டறிந்த தாமஸ் ஆல்வா எடிசன் மறைந்தார்.
👉 1954ஆம் ஆண்டு அக்டோபர் 18ஆம் தேதி டெக்சாஸ் இன்ஸ்ட்ருமென்ட்ஸ் நிறுவனம் முதலாவது டிரான்சிஸ்டர் வானொலியை அறிமுகப்படுத்தியது.


முக்கிய தினம் :-


உலக வாசெக்டொமி தினம் 

🌷 உலக வாசெக்டொமி (vasectomy) தினம் அக்டோபர் 18ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. உலகளவில் அளவான குடும்பங்களை ஏற்படுத்த ஆண்களுக்கும் குடும்பக் கட்டுப்பாடு செய்யலாம் என்கிற விழிப்புணர்வை கொண்டுவர இத்தினம் 2013ல் அறிவிக்கப்பட்டது.


நினைவு நாள் :-


சார்லஸ் பாபேஜ்

🌷 கணினியின் தந்தை என்றழைக்கப்படும் சார்லஸ் பாபேஜ் 1791ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி லண்டனில் பிறந்தார்.

🌷 1810ஆம் ஆண்டில் கேம்பிரிட்ஜில் உள்ள டிரினிட்டி பல்கலைக்கழகத்தில் இணைந்தவர், கணிதத்தில் தனது திறமையை வெளிப்படுத்தினார். 1834ஆம் ஆண்டு கணிதத்தையும், எந்திரத்தையும் இணைத்துப் பகுப்பாய்வுப் பொறி (Analytical Engine) என்ற முதல் கணினியை இவர் உருவாக்கினார்.

🌷 தொடக்க கால கணிப்பீட்டுப் பொறிகளான அனலிட்டிக்கல் என்ஜின் (Analytical Engine) மற்றும் டிஃபரன்ஸ் என்ஜினை (Difference Engine) வடிவமைத்தவர் சார்லஸ் பாபேஜ்.

🌷 இவர் நியமத் தொடருந்துப் பாதை (Difference Engine) அளவுக்கருவி, சீரான அஞ்சல் கட்டண முறை என பல கருவிகளை கண்டுபிடித்துள்ளார். இவர் தன்னுடைய 79வது வயதில் 1871ஆம் ஆண்டு அக்டோபர் 18ஆம் தேதி மறைந்தார்.


பிறந்த நாள் :-


ஓம் பூரி 

✍ இந்திய நடிகர் ஓம் பூரி 1950 ஆம் ஆண்டு அக்டோபர் 18 ஆம் தேதி ஹரியானாவிலுள்ள அம்பாலாவில் பிறந்தார்.

✍ இவர் பல பாகிஸ்தானிய, இந்திய, இங்கிலாந்து மற்றும் ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்.

✍ இவர் சுதந்திர போராட்ட திரைப்படங்களிலும், மாறுபட்ட கலைப்படங்களிலும் பங்காற்றியுள்ளார்.

✍ இவருக்கு இந்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்துள்ளது.