ராணிப்பேட்டை அடுத்த அம்மூரில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார் .
ராணிப்பேட்டை மாவட்டம் , அம்மூர் பாலாஜி நகரை சேர்ந்தவர் ஸ்ரீஜனனி ( 21 ) . இவர் வங்கதேசத்தில் எம்பிபிஎஸ் 4 ம் ஆண்டு மருத்துவம் படித்து வந்தார் . கொரோனா தொற்று பரவல் காரணமாக சொந்த ஊருக்கு வந்த ஸ்ரீஜனனி வீட்டில் இருந்தபடி ஆன்லைன் வகுப்பு மூலமாக மருத்துவம் படித்துவந்தார் . இந்நிலையில் , நேற்று காலை ஸ்ரீஜனனியின் தாய் , தந்தையர் வேலைக்கு சென்று விட்டனர் .

ஸ்ரீஜனனி வீட்டில் தனியாக இருந்த நிலையில் அவரது உறவினர் அவருக்கு போன் செய்துள்ளார் . நீண்டநேரமாக போன் எடுக்காததால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரது வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர் . அப்போது , வீட்டின் மேல்மாடியில் உள்ள அறையில் ஸ்ரீஜனனி தூக்கில் தொங்கியபடி சடலமாக கிடந்தார் . 

ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்த இறந்த ஸ்ரீஜனனியின் தயார் அழுது புரண்டபடி வீட்டிற்கு சென்றார் . இதுகுறித்து தகவலறிந்த ராணிப்பேட்டை டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு , பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் , வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.