இன்று முதல் வாரத்தின் அனைத்து நாட்களிலும் கோவில்களை திறந்து பக்தர்களுக்கு அனுமதி வழங்குவதற்கு தமிழக அரசு நேற்று உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து மதுரை மீனாட்சியம்மன் கோவில் உட்பட தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களும் வெள்ளிக்கிழமையான இன்று காலை முதல் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய நடை திறக்கப்பட்டு உள்ளது.
பக்தர்கள் காலையிலேயே கோவில்களுக்கு படையெடுக்க தொடங்கினர். இதனால் கோவிலை சுற்றிலும், பூக்கடைகள், பழக் கடைகள் வைத்திருப்போர் மகிழ்ச்சியுடன் வியாபாரத்தை தொடங்கி இருப்பதை பார்க்க முடிகிறது. கோவில்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.
மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைக்குச் செல்ல தமிழக அரசால் அனுமதி தரப்பட்டுள்ளது திருமண நிகழ்வில் 100 நபர்கள் பங்கு பெறவும் இறப்பு நிகழ்வு களில் 50 நபர்கள் வரை கலந்து கொள்ளவும் அரசு அனுமதி அளித்துள்ளது.