ராணிப்பேட்டை மாவட்ட இந்து வழக்கறிஞர் முன்னணி ஆலோசனைக் கூட்டம் வாலாஜாவில் நேற்று நடந்தது.
மாவட்ட தலைவர் குண சேகரன் தலைமை தாங்கினார். மூத்த வக்கீல் சுரேந்திரன் முன்னிலை வகித்தார். செயலாளர் குமார் வரவேற்றார். இதில் இந்து முன்னணி வேலூர் கோட்ட அமைப்பாளர் ராஜேஷ் கலந்து கொண்டு பேசினார். இதில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன.
பொது வீதிகளில் விநாயகர் சிலை வைத்து வழிபடுவதுக்கு காவல்துறை தடை செய்துள்ளது. இதனை நீக்க தமிழக அரசு முன்வர வேண்டும். இதன்மூலம் சிலை செய்யும் குடும்பங்களின் வாழ் வாதாரம் காக்கப்படும். பல குடும்பங்களின் வாழ் வாதாரம் காக்கப்படும்.
காவேரிப்பாக்கம் கொங்கணேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமித்துள்ளனர். சென்னை உயர் நீதிமன்றம் உடனடியாக ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என ஆணை பிறப்பித்தும் இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.
இதில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலையிட்டு கொங்கணேஸ்வரர் கோயில் நிலத்தை மீட்டு புனிதத்தை காப்பாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த கூட்டத்தில் வக்கீல் அணியை சேர்ந்த அன்பு , கோபாலகிருஷ்ணன் புகழேந்தி , பாலகிருஷ்ணன் , லெனின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.