தனியார் சிமென்ட் தொழிற்சாலையில் ஏற்பட்ட ஸ்டீம் பாய்லர் வெடித்ததில் கள்ளக்குறிச்சி சேர்ந்த 1 தொழிலாளி உட்பட 5 வடமாநில இளைஞர்கள் படுகாயம் அடைந்து சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த வின்டர் பேட்டை பகுதியில் செயல்பட்டுவரும் ராம்கோ நிறுவனத்திற்கு சொந்தமான சிமெண்ட் ஓடு தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.
இந்த தொழிற்சாலையில் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் இரவு மற்றும் பகல் நேரங்களில் சூழ்ச்சி முறையில் பணியாற்றி வரும் இந்த தொழிற்சாலையில் ஒப்பந்த அடிப்படையில் தமிழகம் மற்றும் வட மாநிலங்களைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்கள் இந்த தொழிற்சாலையில் பணியாற்றி வருகின்றனர்.
இந்த விபத்தானது இரவு தொழிலாளர்கள் பணியாற்றக் கூடிய இடத்தில் சிமெண்ட் சீட் தயாரிக்கும் ஸ்டீம் பாய்லர் அருகில் நின்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக பாய்லர் அழுத்தம் தாங்காமல் வெடித்ததாக கூறப்படுகிறது.
அதிகம் அழுத்தம் கொண்ட இந்த ஸ்டேம் பாய்லர் எதிர்பாராத விதமாக வெடித்து சிதறியதில் அருகாமையில் நின்று கொண்டிருந்த பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மீது வெடித்து சிதறியுள்ளது.
இந்த விபத்தில் பலருக்கு அருகாமையிலிருந்த ஒப்பந்த அடிப்படையில் பணி செய்யும் கள்ளக்குறிச்சியை சேர்ந்த வசந்த் 23 , உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த முகமது ஜாவித்/21, சர்பர் அலி - 25, ராகுல்பி - 19, பங்கஜ் குமார் - 25, மற்றும்் மத்தியபிரதேசத்தை சேர்ந்த ராம் - 19
இவர்கள் 6 பேருக்கும் அரக்கோணம அரசு மருத்துவமனையில் முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு 3ன்று 108 ஆம்புலன்ஸ் மூலமாக அனுப்பப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி சேர்ந்த வசந்த் உட்பட 4 தொழிலாளர்கள் ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவமனை தரப்பில் கூறப்படுகிறது. மேலும் இந்த விபத்து குறித்து அரக்கோணம் காவல் துணை கண்காணிப்பாளர் புகழேந்தி கணேஷ் தொழிற்சாலைக்கு சென்று நேரில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்