ராணிப்பேட்டை காவல் நிலையத்தில் நேற்று விநாயகர் சதுர்த்தியை யொட்டி ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.
ராணிப்பேட்டை காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி உத்தரவின்பேரில் விநாயகர் சதுர்த்தியை யொட்டி ஆலோசனை கூட்டம் சப் - இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி தலைமையில் நேற்று நடந்தது. சப் - இன்ஸ் பெக்டர்கள் கணேசன் , இருசப்பன் , துரையரசன் , கோகுலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

கூட்டத்தில் சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி பேசியதாவது. 

தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி விமரிசையாக ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது. அதேபோல் இந்த ஆண்டும் வரும் 10 ம் தேதி அன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. தற்போது வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய மாநில அரசுகளின் உத்தரவுப்படி 144 சிஆர்பிசி படி ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் பொது இடங்களில் மக்கள் அதிகமாக கூடு வதை தவிர்க்க வேண்டும் என அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது.

கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்கவும் , பொதுமக்கள் நலன் கருதியும் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து விழா கொண்டாடுவதோ விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்வதோ அச்சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதோ தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில் அனுமதிக்க இயலாது. 

எனவே விநாயகர் சதுர்த்தி பண்டிகையை அவரவு வீடுகளிலேயே சிலைகளை வைத்து கொண்டாடுமாறு அறி வுறுத்தப்படுகிறது. 

எனவே நாம் அனைவரும் அரசு உத்தரவுப்படி முகக்கவசம் அணிந்து கொண்டும், சமூக இடைவெளி பின்பற்றி வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத் தில் விநாயகர் சதுர்த்தி விழா குழுவினர் 30 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.