How to Open IPPB Mobile Banking: India Post Payments Bank
இந்திய தபால் நிலையம் ஆனது, India Post Payment Bank என்ற Mobile Banking செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வசதியின் மூலம் தபால் நிலைய சேமிப்பு கணக்குகளை மொபைல் போன் மூலமாகவே இயக்க முடியும். IPPB கணக்கை எப்படி Register செய்வது மற்றும் அதன் சிறப்புகள் என்ன என்பதை இந்த கட்டுரையில் காணலாம்.
What is IPPB Mobile App
உங்களின் மொபைல் போனில் இருந்து பாதுகாப்பாக மற்றும் எளிதாக பரிவர்த்தனைகளை மேற்கொள்ளவும், அதிநவீன சேவைகளை பயன்படுத்தவும் தபால் நிலையமானது IPPB என்ற Mobile App யை வழங்குகிறது.
இந்த செயலியின் மூலம் கணக்கை திறந்தால் Account Number, Customer ID ஆகியவற்றை SMS மூலம் பெறுவீர்கள்.
இந்த செயலியை பயன்படுத்தி எங்கிருந்தும் மற்றும் எந்த நேரத்திலும் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும்.
IPPB Mobile Banking Facilities
IPPB செயலியில் தற்போது பின்வரும் சேவைகள் வழங்கப்படுகின்றன
Balance Enquiry
Request for a Statement
Transfer Funds Within the Bank Account
Transfer Funds to Other Bank Account
Recharge Prepaid and DTH
Pay Water and Electricity Bills
Manage Your Post Office Savings Account (POSA)
கணக்கை திறக்க தேவையானவை
நீங்கள் IPPB செயலியில் கணக்கை Open செய்வதற்கு பின்வரும் ஆவணங்கள் கட்டாயம் தேவை:
ஆதார் கார்டு
பான் கார்டு
மொபைல் நம்பர்
How to Open IPPB Mobile Banking Services
IPPB Mobile Banking கணக்கை திறப்பது மிகவும் எளிதாகும். பின்வரும் செயல்முறைகளை பின்பற்றி உடனடியாக கணக்கை திறக்கலாம்.
IPPB Mobile Banking யை இரண்டு வழிகளில் (Method) திறக்கலாம்.
1. Mobile App
2. Post Office
Method 1: Mobile App
நீங்களே உங்களின் ஸ்மார்ட் மொபைல் மூலம் கணக்கை Open செய்யலாம்.
நீங்கள் கணக்கை உங்களின் மொபைல் மூலம் திறப்பதாக இருந்தால், ஆதார் கார்டில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் அவசியம் ஆகும். ஏனெனில் ஆதார் தரப்பிலிருந்து OTP எண்ணை சரிப்பார்ப்பதற்கு, ஆதாரில் பதிவு செய்த மொபைல் எண் தேவைப்படும்.
Step 1: முதலில் Playstore இல் இருந்து IPPB App யை Download செய்ய வேண்டும்.
Step 2: அந்த App யை திறந்த பிறகு, உங்களுக்கு தேவையான மொழியை தேர்வு செய்யவும்.
Step 3: மொழியை தேர்வு செய்த பிறகு Open Your Account Now என்பதை கிளிக் செய்யவும்.
Step 4: உங்களின் Mobile Number மற்றும் PAN Number யை Enter செய்ய வேண்டும். Product Name என்ற இடத்தில் DGSBA – Digital Saving Bank Account என்று ஏற்கனவே தேர்வாகி இருப்பதை காண்பீர்கள்.
Step 5: இப்பொழுது Continue என்பதை கிளிக் செய்க.
Step 6: தற்போது உங்களின் மொபைல் எண்ணிற்கு OTP நம்பரை Enter செய்து Submit செய்யவும்.
Step 7: உங்களின் ஆதார் எண்ணை Type செய்ய வேண்டும். பிறகு Check Box களை டிக் செய்து Submit என்பதை அழுத்தவும்.
Step 8: இப்பொழுது ஆதாரில் பதிவு செய்த மொபைல் எண்ணிற்கு OTP வரும். அந்த OTP எண்ணை உள்ளிட்டு Submit என்பதை அழுத்தவும்.
Step 9: தற்போது Account Opening Form என்ற பக்கம் திறக்கும்.
Personal Information: இதில், ஏற்கனவே உங்களின் ஆதாரில் உள்ள தகவல்கள் Fetch ஆகி இருக்கும். எனவே மீதமுள்ள Mother’s Maiden Name, Husband/Wife Name, Mother’s Name, Father’s Name, Email ID போன்ற தகவல்களை Enter செய்து Save என்பதை கிளிக் செய்க.
PAN & Communication Address: நாம் ஏற்கனவே PAN கார்டை கொடுத்திருப்பதால் Form 60 Declaration யை கொடுக்க தேவையில்லை. Communication Address என்ற இடத்தில் Same as Permanent Address என்பதை டிக் செய்து Save செய்யவும்.
Nominee Details: நீங்கள் நியமானதாரர் (Nominee) தகவல்களை கொடுக்க விரும்பினால் Yes – Wish to Nominee என்பதை தேர்வு செய்து, அதற்கான விவரங்களை நிரப்ப வேண்டும். இல்லையென்றால் No – Do not Wish to Nominee என்பதை தேர்வு செய்து Save என்பதை கிளிக் செய்யவும்.
Additional Information: இந்த பிரிவில் உங்களை பற்றிய கூடுதல் தகவல்களை அளிக்க வேண்டும். அதாவது Marital Status, Occupation Type, Annual Income, Education Level போன்றவற்றை உள்ளிட்டு Save என்பதை அழுத்தவும்.
Account Information: Mode of Account Statement Delivery என்பதில் Online (உங்களின் விருப்பம்) என்பதை தேர்வு செய்க. DBT Mapping என்ற இடத்தில் Yes – I don’t receive DBT in any existing account (உங்களின் விருப்பம்) என்பதை தேர்வு செய்யவும். பிறகு I Agree என்ற Check Box யை டிக் செய்து Save செய்யவும்.
Step 10: இப்பொழுது Continue என்பதை கிளிக் செய்யவும்.
Step 11: தற்போது Product Information என்ற பக்கம் திறக்கும். அதில் Mobile Banking, SMS Banking, Missed Call Banking போன்ற அனைத்தையும் டிக் செய்யவும். பிறகு அதற்க்கு கீழே நீங்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் தெரியும். அனைத்தையும் சரிபார்த்த பின்பு Confirm என்பதை அழுத்தவும்.
Step 12: கடைசியாக உங்களின் மொபைல் எண்ணிற்கு ஆதார் தரப்பிலிருந்து OTP எண் வரும். அதை உள்ளிட்டு Submit என்பதை அழுத்துக.
Step 13: இப்பொழுது Account Created Successfully என்ற செய்தி தோன்றுவதை காணலாம்.
மேலும் உங்களின் IPPB கணக்கின் Customer ID மற்றும் Account Number ஆனது, மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும். அவற்றை நீங்கள் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
Method 2: Post Office
உங்களுக்கு அருகில் உள்ள ஒரு தபால் நிலையத்திற்கு சென்றும் IPPB கணக்கை திறக்கலாம். இவ்வாறு திறப்பதற்கு உங்களின் ஆதார் கார்டில் பதிவு செய்த மொபைல் எண் தேவையில்லை. ஏனெனில் அங்கு ஆதார் Verification செய்வதற்கு உங்களின் கைரேகையை வைக்க வேண்டியது வரும்.
ஆதார் எண்ணில் மொபைல் நம்பரை பதிவு செய்யாதவர்கள் மற்றும் ஏற்கனவே பதிவு செய்த மொபைல் நம்பர் இல்லாதவர்கள் போன்றவர்கள் Post Office இல் சென்று India Post Payment Bank கணக்கை திறக்கலாம்.
நீங்கள் தபால் நிலையத்திற்கு செல்லும் போது ஆதார், பான் அட்டை மற்றும் தற்போது பயன்படுத்தும் மொபைல் எண் ஆகியவற்றை கொண்டு செல்ல வேண்டும்.
அங்கு கணக்கு திறக்கப்பட்டவுடன், அதே போல் Customer ID மற்றும் Account Number யை உங்களின் மொபைல் எண்ணிற்கு SMS மூலம் வந்துவிடும்.
How to Register / Activate IPPB Account
நீங்கள் கணக்கை Open செய்துவிட்டால் மட்டும் முடிந்து விடாது. அதை மொபைல் செயலி மூலம் பயன்படுத்துவதற்கு Register செய்ய வேண்டும்.
அதை எவ்வாறு Register செய்வது என்பதை பற்றி காணலாம்.
Step 1: செயலியை Open செய்து Login Now என்பதை கிளிக் செய்யவும்.
Step 2: இப்பொழுது உங்களின் Account Number, Customer ID, Date of Birth மற்றும் Mobile Number ஆகியவற்றை உள்ளிட்டு Register என்பதை அழுத்தவும்.
Step 3: நான்கு இலக்க MPIN நம்பரை Type செய்து Set MPIN என்பதை கிளிக் செய்யவும்.
Step 4: தற்போது உங்களின் மொபைல் எண்ணிற்கு OTP எண்ணை உள்ளிட்டு Submit என்பதை அழுத்தவும்.
Step 5: இப்பொழுது Registration Successfull என்ற செய்தி தோன்றும்.
இந்த MPIN என்பது Mobile PIN ஆகும். அதாவது நீங்கள் இந்த செயலியை திறப்பதற்கு இந்த MPIN ஆனது பயன்படும்.
தற்போது அனைத்து செயல்முறைகளும் முடிந்துவிட்டது. இப்பொழுதில் இருந்து நீங்கள் Post Payment Bank யை பயன்படுத்த ஆரம்பிக்கலாம்.
தொடர்புடைய கட்டுரைகள்:
Post Office Bank Account
Post Office Monthly Income Scheme (MIS)
Post Office Recurring Deposit (RD) Scheme
PPF Account in Post Office
Kisan Vikas Patra in Post Office