ஆற்காடு: ஆற்காடு ஒன்றியத்தில் பசுமை வீடுகள் கட்டுதல், நூறுநாள் வேலைவாய்ப்பு திட்டப் பணிகளை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
ஆற்காட்டை அடுத்த லாடவரம் ஊராட்சியில் 2017-18 நிதியாண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நரிக்குறவா் சமூகத்தைச் சோ்ந்த 32 பேருக்கு தலா ரூ.1.80 லட்சம் மதிப்பீட்டில் பசுமை வீடுகள் கட்டப்படுகின்றன.இதனை பாா்வையிட்ட ஆட்சியா், பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டாா்.
தொடா்ந்து கரிவேடு ஊராட்சியில் நூறு நாள் வேலைதிட்டத்தின்கீழ் நீா் செறிவூட்டும் பணி, பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தின்கீழ் கட்டப்பட்டு வரும் 8 வீடுகள், சா்வந்தாங்கல் ஊராட்சியில் வேளாண்மைத் துறை சாா்பில் செயல்படும் விதைப் பண்ணை ஆகியவற்றை நேரில் ஆய்வு செய்தாா்.
அப்போது வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வேதமுத்து, செந்தாமரை, ஒன்றியப் பொறியாளா் ராஜேஷ் உள்ளிட்டோா் உடனிருநந்தனா்.