குறள் : 380
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்.

மு.வ உரை :
ஊழை விட மிக்க வலிமையுள்ளவை வேறு எவை உள்ளன  ஊழை விலக்கும் பொருட்டு மற்றோரு வழியைஆராய்ந்தாலும் அங்கும் தானே முன் வந்து நிற்கும்.

கலைஞர் உரை :
இயற்கை நிலையை மாற்றி மற்றொரு செயற்கை நிலையை அமைத்திட முனைந்தாலும், இயற்கை நிலையே முதன்மையாக வந்து நிற்பதால் அதைவிட வலிமையானவையாக வேறு எவை இருக்கின்றன?.

சாலமன் பாப்பையா உரை :
விதியை வெல்ல வேறொரு வழியை எண்ணி நாம் செயற்பட்டாலும், அந்த வழியிலேயோ வேறு ஒரு வழியிலேயோ அது நம்முன் வந்து நிற்கும்?; ஆகவே விதியை விட வேறு எவை வலிமையானவை?.

Kural 380
Oozhir Peruvali Yaavula Matrondru
Soozhinun Thaanmun Thurum

Explanation :
What is stronger than fate ? If we think of an expedient (to avert it)  it will itself be with us before (the thought)



இன்றைய பஞ்சாங்கம்
21-05-2021, வைகாசி 07, வெள்ளிக்கிழமை, நவமி திதி பகல் 11.11 வரை பின்பு வளர்பிறை தசமி. பூரம் நட்சத்திரம் பகல் 03.22 வரை பின்பு உத்திரம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1/2. அம்மன் வழிபாடு நல்லது. கரி நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். 

இராகுு காலம் - பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00
இன்றைய ராசிப்பலன் - 21.05.2021

மேஷம்
இன்று உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் குறையும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் வீண் செலவுகள் அதிகரிக்கும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள்.

ரிஷபம்
இன்று பணவரவு சுமாராக இருக்கும். வாகனங்களால் செலவுகள் ஏற்படலாம். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் அதிகரிக்கும். சேமிப்பு குறையும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகும். சிந்தித்து செயல்பட்டால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

மிதுனம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் கூடும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். வெளி வட்டார நட்பு சிறப்பாக இருக்கும். கடன் பிரச்சினைகள் தீரும்.

கடகம்
இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகள் வழியில் சிறு மன சங்கடங்கள் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை அளிக்கும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது. சுபகாரியங்கள் சில தடைகளுக்குப்பின் கைகூடும்.

சிம்மம்
இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் அனுகூலப் பலன் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் மறைந்து ஒற்றுமை நிலவும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தினர் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். கடன்கள் குறையும்.

கன்னி
இன்று மன உறுதியோடு செயல்பட்டால் மட்டுமே பிரச்சினைகளை சமாளிக்க முடியும். பெற்றோருடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் உண்டாகும். தொழிலில் பல புதிய மாற்றங்களால் லாபம் பெருகும். பெரிய மனிதர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும்.

துலாம்
இன்று உறவினர்களால் குடும்பத்தில் சந்தோஷம் கூடும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். செலவுகளை குறைப்பதன் மூலம் பணப்பிரச்சினை தீரும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் லாபம் இரட்டிப்பாகும். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் பாராட்டப்படும்.

விருச்சிகம்
இன்று நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும். குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாகும். வியாபார சம்பந்தமான கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வேலையில் உள்ள பிரச்சினைகள் சற்று குறையும். வருமானம் இரட்டிப்பாகும்.

தனுசு
இன்று எடுக்கும் முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படலாம். பிள்ளைகளோடு கருத்து வேறுபாடுகள் ஏற்படும். தொழில் வளர்ச்சிக்காக போட்ட புதிய திட்டங்கள் வெற்றியை கொடுக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள்.

மகரம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். சுபகாரிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம்.

கும்பம்
இன்று அலுவலக பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். புதிய வாகனம் வாங்கி மகிழ்வீர்கள். பெற்றோரின் அன்பும் ஆதரவும் கிட்டும். வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் குறைந்து லாபம் பெருகும்.

மீனம்
இன்று இனிய செய்தி இல்லம் தேடி வரும். நண்பர்களின் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தரும். தொழிலில் புதிய சலுகைகளை அறிமுகபடுத்தி லாபம் பெறுவீர்கள். வங்கி கடன் எளிதில் கிட்டும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பணிசுமை குறையும்.

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,