வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாலை மாண்புமிகு துணி கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் காந்தி, வேலூர் மாவட்டத்தில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் நோயாளிகளுக்கு தேவையான படுக்கை வசதிகள் ஆக்சிசன் வசதிகள் குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் பார்த்திபன்(பொறுப்பு) அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் செல்வி, துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் மணிவண்ணன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தமதிவாணன் மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் விஜயராகவன் ஆகியோருடன் ஆலோசனை செய்தார்.

இந்த ஆலோசனையின் போது வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு கார்த்திகேயன்,
ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் திரு ஜே எல் ஈஸ்வரப்பன், உதவி காவல் கண்காணிப்பாளர் திரு ஆல்பட் ஜான், மற்றும் மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.