காவேரிப்பாக்கம்: காவேரிப்பாக்கம் அருகே, தாயின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற மகள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அடுத்த சுமைதாங்கியை சேர்ந்தவர் லஷ்மி, 62. இவர் கடந்த மாதம், 28ல் உடல் நலக்குறைவால் இறந்தார்.
சென்னை பெருங்கொளத்தூரில் இருந்த அவரது மகள் பாமா, 38, இறுதிச்சடங்கில் பங்கேற்றார். பின்னர் ஈமச்சடங்குகளுக்காக அங்கேயே தங்கியிருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு பாமா இறந்தார்.
காவேரிப்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.