ராணிபேட்டை மாவட்டத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்வதை முற்றிலும் ஒழிப்பதற்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார் உத்தரவு பிறப்பித்ததன் பேரில் அரக்கோணம் கோட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு மனோகரன் தலைமையில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதி கொண்டு அமைக்கப்பட்ட தனிபடை போலீசார் நேற்று அரக்கோணம் கோட்டத்தில் ரெயிடு நடத்தினர்,
இதில் அரக்கோணம் அடுத்த புதுபட்டு கிராமத்தில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த விநாயகம்(45) இவரது அண்ணன் சீனிவாசன்(48) ஆகியோரை கைது செய்து, அவர்களிடம் இருந்து சுமார் 105 லிட்டர் சாராயம் மற்றும் 200 லிட்டர் ஊரலும் பறிமுதல் செய்தனர்.