குறள் : 333
அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல்.
மு.வ உரை :
செல்வம் நிலைக்காத இயல்பை உடையது அத்தகைய செல்வத்தைப்பெற்றால் பெற்ற அப்போதே நிலையான அறங்களைச் செய்ய வேண்டும்.
கலைஞர் உரை :
நம்மை வந்தடையும் செல்வம் நிலையற்றது என்பதை உணர்ந்து அதைக் கொண்டு அப்பொழுதே நிலையான நற்செயல்களில் ஈடுபட வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை :
நிலையாத இயல்பினை உடையது செல்வம்; அது கிடைத்தால் நிலையான அறங்களைச் செய்க.
Kural 333
Arkaa Iyalpitruch Chelvam Adhupetraal
Arkupa Aange Seyal
Explanation :
Wealth is perishable; let those who obtain it immediately practise those (virtues) which are imperishable
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,
இன்றைய பஞ்சாங்கம்
04-04-2021, பங்குனி 22, ஞாயிற்றுக்கிழமை, அஷ்டமி திதி பின்இரவு 03.00 வரை பின்பு தேய்பிறை நவமி. பூராடம் நட்சத்திரம் பின்இரவு 02.05 வரை பின்பு உத்திராடம். சித்தயோகம் பின்இரவு 02.05 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் - மாலை 04.30 - 06.00, எம கண்டம் - பகல் 12.00 - 01.30, குளிகன் - பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00, மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00.
இன்றைய ராசிப்பலன் - 04.04.2021
மேஷம்
இன்று உங்கள் உடல்நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படலாம். உடன் பிறந்தவர்களால் வீட்டில் அமைதி குறையும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பணபற்றாக்குறையை சமாளிக்க சிக்கனமுடன் செயல்படுவது நல்லது.
ரிஷபம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் அலைச்சல் டென்ஷன் உண்டாகும். எந்த ஒரு சுப காரியத்தையும், தொழில் சம்பந்தமாக எடுக்கப்படும் புதிய முயற்சிகளையும் தள்ளி வைப்பது நல்லது. வெளி இடங்களில் அமைதியாக இருந்தால் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம்.
மிதுனம்
இன்று உங்களுக்கு இருந்த ஆரோக்கிய பாதிப்புகள் நீங்கி எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உடனிருப்பவர்களின் உதவியுடன் குடும்பத்தின் பொருளாதார நெருக்கடிகள் சற்று குறையும். மற்றவர்களிடம் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம்.
கடகம்
இன்று உங்களுக்கு சுபசெலவுகள் ஏற்படும். பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். வியாபாரத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். பூர்வீக சொத்து பிரச்சினைகள் சற்று குறையும்.
சிம்மம்
இன்று உங்களின் ஆரோக்கிய ரீதியாக சிறு உபாதைகள் தோன்றி மறையும். தேவையில்லாத செலவுகளால் கையிருப்பு குறையும். எந்த செயலையும் மன தைரியத்தோடு செய்து முடிப்பீர்கள். குடும்பத்தினர் உறுதுணையாக இருப்பார்கள். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.
கன்னி
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் காலதாமதம் ஏற்படலாம். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் இருந்தாலும் அனுகூலப் பலன்கள் உண்டாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். பணப் பிரச்சினைகள் ஓரளவு குறையும்.
துலாம்
இன்று பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சுபகாரியங்கள் எளிதில் கைகூடும்.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு பயணங்களால் அதிக அலைச்சல் ஏற்படும். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். பெரியவர்களின் ஆலோசனைகளால் வாழ்வில் புதிய மாற்றங்கள் உண்டாகும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.
தனுசு
இன்று உங்களுக்கு தனவரவு தாராளமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பழைய நண்பர்களை சந்திப்பதில் ஆர்வம் அதிகரிக்கும். பெற்றோர்களின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். பிள்ளைகளின் விருப்பங்களும் நிறைவேறும்.
மகரம்
இன்று உங்களுக்கு வரவேண்டிய பணவரவில் சிறு தடை தாமதங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் ஒற்றுமை குறையும் சூழ்நிலை உருவாகும். ஆடை ஆபரணம் வாங்கும் வாய்ப்பு ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப்பலன்கள் ஏற்படும். தொழிலில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் லாபம் கிட்டும்.
கும்பம்
இன்று நீங்கள் புது பொலிவுடனும், உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு பக்க பலமாக இருப்பார்கள். வியாபார முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பழைய கடன்கள் வசூலாகும்.
மீனம்
இன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் இருந்த நெருக்கடிகள் நீங்கும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். கடன் பிரச்சினைகள் குறையும். சேமிப்பு உயரும்.